மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!
தமிழ்நாடு

போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!

Social Vision
Last updated: 2026/11/01 at 1:22 PM
Social Vision
Share
3 Min Read
SHARE

போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!

ரூ.46.59 கோடி செலவில் 26 போக்சோ நீதிமன்றங்கள் – போதைப்பொருள் வழக்குகளுக்கு 4 நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை

சென்னை:

Contents
போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!ரூ.46.59 கோடி செலவில் 26 போக்சோ நீதிமன்றங்கள் – போதைப்பொருள் வழக்குகளுக்கு 4 நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை26 புதிய போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள்போதைப்பொருள் வழக்குகளுக்கு 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்நீதித்துறை நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கவும், போக்சோ மற்றும் போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 30 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

26 புதிய போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகளின் விவரங்கள், தற்போதைய நிலை மற்றும் கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களின் தேவை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க

முரசு புயல்: வடதமிழகத்தில் கனமழை, பலத்த காற்று!
தேனி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம்: பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!
தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் மறுநிர்ணயம்!

இந்த ஆய்வின் அடிப்படையில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் 22 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 4 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பாட்டிற்கு வரும் நிலையில் உள்ளன.

இந்நிலையில், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, 12 புதிய சிறப்பு நீதிமன்றங்களும், 14 கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களும் என மொத்தம் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்களை ரூ.46.59 கோடி செலவில் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள 47 காவல் மாவட்டங்களுக்கு மொத்தம் 52 சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் போக்சோ வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தருவதுடன், குழந்தைகளுக்கு எதிரான கொடுமையான குற்றங்கள் மீண்டும் நடைபெறுவதைத் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போதைப்பொருள் வழக்குகளுக்கு 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்

தமிழ்நாடு அரசின் “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” இயக்கத்தின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதுடன், போதைப்பொருள்கள் மற்றும் மனமயக்கப் பொருள்கள் சட்டம், 1985 (NDPS Act) கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழ்நாட்டில் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க 11 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்காக காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய 3 இடங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றமும், சென்னையில் ஒரு கூடுதல் சிறப்பு நீதிமன்றமும் என மொத்தம் 4 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

நீதித்துறை நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும்

போக்சோ மற்றும் போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைப்பதுடன், குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தரவும், நீதித்துறை நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் அரசின் இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்பட இந்த நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.

TAGGED: தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவரைப் போற்றிப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!
Social Vision November 1, 2026 November 1, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

தீபாவளித் திருநாளில் வகுப்புவாத நச்சு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும்:காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தீபாவளி வாழ்த்துச் செய்தி

October 19, 2025
மாவட்டங்கள்

தூய்மை பணியாளர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவின்படி உயர்த்தப்பட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி மனு.

July 30, 2024
சுற்றுலாதமிழ்நாடு

சுற்றுலா செல்ல ரூ 3 கோடி மதிப்பில் 5 நவீன சொகுசு சுற்றுலா பேருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடக்கிவைத்தார்.

July 1, 2024
மாவட்டங்கள்

தருமபுரி பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில், பொதுகழிப்பறை குடிநீர் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்.

June 23, 2025
தமிழ்நாடு

தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணியின், பணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

May 23, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் அலைமோதும் பொதுமக்களின் கூட்டம்..!

July 7, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

முரசு புயல்: வடதமிழகத்தில் கனமழை, பலத்த காற்று!

November 1, 2026
தமிழ்நாடு

தேனி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம்: பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!

October 31, 2026
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் மறுநிர்ணயம்!

October 28, 2026
தமிழ்நாடு

சேலம் மண்டல வானவியல் மாநாடு: 32 மாணவர்கள் மாநிலச் சுற்றுக்குத் தகுதி!

October 26, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?