மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தேனி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம்: பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தேனி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம்: பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!
தமிழ்நாடு

தேனி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம்: பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!

Social Vision
Last updated: 2026/10/31 at 7:34 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

தேனி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம்: பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!

பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் மெத்தனம்: சிறைத் துறை அலுவலர்கள் பணியிட மாற்றம் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு

சென்னை:

Contents
தேனி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம்: பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் மெத்தனம்: சிறைத் துறை அலுவலர்கள் பணியிட மாற்றம் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு17 கைதிகள் தப்பிய சம்பவம்பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்சிறைத் துறை அலுவலர்கள் பணியிட மாற்றம்பாதுகாப்புப் பணிகளில் தொய்வு கூடாது!

தேனி மாவட்டச் சிறையில் 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் மெத்தனமாகச் செயல்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், சிறைத் துறை அலுவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

17 கைதிகள் தப்பிய சம்பவம்

தேனி மாவட்டச் சிறையில் கடந்த 26.10.2026 அன்று இரவு அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு, தப்பிச் சென்ற 17 கைதிகளையும் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க

முரசு புயல்: வடதமிழகத்தில் கனமழை, பலத்த காற்று!
போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!
தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் மறுநிர்ணயம்!

பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள், கண்காணிப்புப் பணிகளில் நிலவிய மெத்தனப்போக்கு மற்றும் பணியில் ஏற்பட்ட கவனக்குறைவு ஆகியவை குறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்படி, தேனி மாவட்டச் சிறையில் 06.08.2024 முதல் சிறைக் கண்காணிப்பாளர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனித்து வந்த துணைச் சிறை அலுவலர் ந. நாகேஸ்வரன், சிறைக் கைதிகள் மற்றும் பணியாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளில் உரிய கவனம் செலுத்தத் தவறியதற்காக, தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி, 30.10.2026 முதல் மறு உத்தரவு வரும் வரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிறைத் துறை அலுவலர்கள் பணியிட மாற்றம்

மேலும், சிறை நிர்வாகத்தில் கண்காணிப்பு, பொறுப்புடைமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், மதுரை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் ஆர். கிருஷ்ணராஜ், சேலம் மத்தியச் சிறைக் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்புப் பணிகளில் தொய்வு கூடாது!

சிறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படாத வகையில், சிறைத் துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புகளை முழு கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், பணியில் மெத்தனமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தேனி மாவட்டச் சிறையில் கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, சிறை நிர்வாகத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளைச் சீரமைக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை சிறைத் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TAGGED: தேனி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம்: பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!
Social Vision October 31, 2026 October 31, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

May 21, 2024
புத்தகம் பேசினால்

தருமபுரி தம்பி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா.

February 18, 2024
மாவட்டங்கள்

பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மண்டலத்திலேயே பணி ஆணை வழங்க கோரி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

March 7, 2024
மாவட்டங்கள்

பென்னாகரம் பேருந்து நிலையத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக திறக்க கோரியும், பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயர் சூட்ட கோரி புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம்

June 19, 2024
மாவட்டங்கள்

அரசியல் அமைப்பை பாதுகாப்போம்; மனுவாதத்தை முறியடிப்போம்: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கருத்தரங்கம்

July 23, 2026
புத்தகம் பேசினால்

எட்டயபுர வரலாற்றை விவரிக்கும் வம்சமணிதீபிகை நூல் 

June 14, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

முரசு புயல்: வடதமிழகத்தில் கனமழை, பலத்த காற்று!

November 1, 2026
தமிழ்நாடு

போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!

November 1, 2026
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் மறுநிர்ணயம்!

October 28, 2026
தமிழ்நாடு

சேலம் மண்டல வானவியல் மாநாடு: 32 மாணவர்கள் மாநிலச் சுற்றுக்குத் தகுதி!

October 26, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?