மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சேலம் மண்டல வானவியல் மாநாடு: 32 மாணவர்கள் மாநிலச் சுற்றுக்குத் தகுதி!
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > சேலம் மண்டல வானவியல் மாநாடு: 32 மாணவர்கள் மாநிலச் சுற்றுக்குத் தகுதி!
தமிழ்நாடு

சேலம் மண்டல வானவியல் மாநாடு: 32 மாணவர்கள் மாநிலச் சுற்றுக்குத் தகுதி!

Social Vision
Last updated: 2026/10/26 at 9:26 AM
Social Vision
Share
3 Min Read
SHARE

சேலம் மண்டல வானவியல் மாநாடு: 32 மாணவர்கள் மாநிலச் சுற்றுக்குத் தகுதி!

தமிழ்நாடு வானவியல் மற்றும் அறிவியல் கழகத்தின் (TASS) முன்னெடுப்பில் நடைபெற்ற இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டில் (YASSC 2026), சேலம் மண்டலத்தைச் சேர்ந்த 32 மாணவர்கள் மாநில அளவிலான சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற இம்மாநாட்டுக்கு, சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர் த. மகேஸ்வரி தலைமை வகித்தார்.

கல்லூரி மாணவர்களிடையே வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை வளர்த்தல், அறிவியல் கருத்துகளை எளிமையாகப் புரியவைத்தல், மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் அறிவியல் திறமைகளை வெளிக்கொணர்தல் ஆகிய நோக்கங்களுடன் இம்மாநாடு நடத்தப்பட்டது.

இதையும் படிங்க

முரசு புயல்: வடதமிழகத்தில் கனமழை, பலத்த காற்று!
போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!
தேனி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம்: பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!

இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் (IIA) அறிவியல் தொடர்பு மற்றும் பொதுமக்கள் அணுகல் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் M. கிரிஸ்பின் கார்த்திக், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 2982-இன் மாவட்ட DGN Rtn MDS. சுரேஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

சேலம் மண்டல கல்வி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் R. சத்தியநாராயணன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் H. அபிராமி தலைமையுரையாற்றினார். இயற்பியல் துறைத் தலைவர் டாக்டர் M. ராஜா சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். அதை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரைகளை வழங்கினர்.

ஐந்து பிரிவுகளில் மாணவர்களின் திறமைகள் மதிப்பீடு

மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை விளக்கக்காட்சி, அறிவியல் சுவரொட்டி விளக்கக்காட்சி, வானியல் புகைப்படம், வானியல் குறும்படத் தயாரிப்பு, வானியல் விளையாட்டு உருவாக்கம் ஆகிய ஐந்து பிரிவுகளில் மாணவர்கள் தங்களது படைப்புகளையும் திறமைகளையும் வெளிப்படுத்தினர்.

நாமக்கல் அஸ்ட்ரோ கிளப் செயலாளர் ஜீவிதா, பொருளாளர் துர்கா மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்த வான்நோக்கு நிகழ்வில், பாதுகாப்பான சூரிய வடிகட்டியைப் பயன்படுத்தி மாணவர்கள் சூரியனைப் பார்வையிட்டனர். மேலும், வெவ்வேறு கோள்களில் எடை எவ்வாறு மாறுபடும் என்பதை விளக்கும் செயல்வழி அனுபவத்திலும் பங்கேற்றனர். விஞ்ஞானி டாக்டர் M. கிரிஸ்பின் கார்த்திக் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

மாணவர்களுக்கு ரோட்டரி கிளப்புகள் ஆதரவு

மாநாட்டைச் சிறப்பாக நடத்துவதற்கு Rotary Club of Namakkal Poultry Town மற்றும் Rotary Club of Namakkal Kings ஆகியவை முக்கிய ஆதரவு வழங்கின. மாணவர்களுக்கான அடையாள அட்டைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்களைத் தங்களது செலவில் வழங்கியதுடன், நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்குத் தேவையான நிதியுதவியையும் அளித்தன.

மேலும், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த Rotary Club of BHEL City-யின் ரோட்டேரியன் S. H. Afroze மற்றும் ஆதரவை ஒருங்கிணைக்க உதவிய திட்ட ஒருங்கிணைப்பாளர் ரோட்டேரியன் G. Revathi ஆகியோரின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது.

மாநாட்டில் பங்கேற்ற மாணவர்களில் 32 பேர் மாநில அளவிலான சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். தகுதி பெற்ற மாணவர்களுக்கும் பங்கேற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி D. ராமஜெயந்தி, மாநாடு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த கல்லூரி நிர்வாகம், ரோட்டரி கிளப்புகள், விஞ்ஞானி, மதிப்பீட்டாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்தார். நாமக்கல் அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகளும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர்.

மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்கும், இளம் தலைமுறையினரின் படைப்பாற்றல் மற்றும் அறிவியல் திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் இம்மாநாடு பயனுள்ள தளமாக அமைந்தது.

TAGGED: சேலம் மண்டல வானவியல் மாநாடு: 32 மாணவர்கள் மாநிலச் சுற்றுக்குத் தகுதி!
Social Vision October 26, 2026 October 26, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

ஒன்றிய அரசால், கண்ணீரில் மிதக்கும் விவசாயிகளுக்கு எதிராக கண்ணீர் புகையை வீசுவதா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.

February 14, 2024
மாவட்டங்கள்

பெருமாள்கோயில்மேடு- பட்டாளம்மன் கோயில் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற வலியுறுத்தல்.

February 22, 2024
விளையாட்டு

அரூரில் போதைபொருள் பாலியல் குற்றங்களுக்கு எதிரான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா 

December 29, 2024
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்.
மாவட்டங்கள்

வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்.

February 13, 2024
உலகம்

“குரல்கள் கேட்கப்பட வேண்டும்!” – பழங்குடியினப் பெண்கள், சிறுமிகளுக்காக புதிய சர்வதேச தினம்

September 4, 2026
அரசியல்

தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் ஸ்டாலின்:மநீம தலைவர் கமல்ஹாசன் 

February 28, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

முரசு புயல்: வடதமிழகத்தில் கனமழை, பலத்த காற்று!

November 1, 2026
தமிழ்நாடு

போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!

November 1, 2026
தமிழ்நாடு

தேனி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம்: பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!

October 31, 2026
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் மறுநிர்ணயம்!

October 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?