மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்!
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்!
தமிழ்நாடு

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்!

Social Vision
Last updated: 2026/10/25 at 10:06 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்!

தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் – விசிக தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை

சென்னை: வடகிழக்குப் பருவமழையால் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அனுமதிக்கப்படும் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்திட ஒன்றிய அரசைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Contents
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்!தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் – விசிக தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், வடகிழக்குப் பருவமழை காரணமாக விவசாயிகள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் மிகவும் தாமதமாகத் திறக்கப்பட்டதால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள், தற்போது பருவமழையால் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC) நெல் கொள்முதல் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஈரப்பத அளவை 17 சதவீதமாக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், பருவமழையின் காரணமாக அறுவடை செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க

முரசு புயல்: வடதமிழகத்தில் கனமழை, பலத்த காற்று!
போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!
தேனி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம்: பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!

நெல்லின் ஈரப்பதத்தை அனுமதிக்கப்பட்ட அளவான 17 சதவீதத்துக்குக் குறைப்பதற்கு அதை முறையாக உலர்த்த வேண்டும். ஆனால், விவசாயிகளிடமும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல்லை உலர்த்துவதற்குப் போதிய வசதிகள் இல்லை. இதனால், நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதுடன், தொடர்ந்து பெய்யும் மழையால் நெல்லின் ஈரப்பதமும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 2019-20 மற்றும் 2020-21-ஆம் ஆண்டுகளில் 19 முதல் 20 சதவீதம் வரையிலான ஈரப்பதம் கொண்ட நெல்லைக் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்திருந்தது என்பதையும் இச்சூழலில் நினைவூட்டுகிறோம்.

எனவே, விவசாயிகளின் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவைத் தளர்த்துவதற்கு ஒன்றிய அரசைத் தமிழ்நாடு அரசு உடனடியாக வலியுறுத்த வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மேலும், சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்வதற்குப் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனையும் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லைத் தாமதமின்றிக் கொள்முதல் செய்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலில் நிலவும் சிக்கல்களுக்குத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் எனத் தனது அறிக்கையில் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

TAGGED: நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்!
Social Vision October 25, 2026 October 25, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி :நடிகர் சிவகார்த்திகேயன்.

February 18, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுதிட்டம் துவக்கம் 

July 15, 2024
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2026
உலகம்தொல்லியல்

குகை ஓவியங்கள்  மனிதனின் முதல் கலைப் பதிவு பிரான்ஸ் லாஸ்கோ குகை கண்டுபிடிக்கப்பட்டு 86 ஆண்டுகள் 

September 11, 2026
அரசியல்

மனித நேய மக்கள் கட்சியின் மதுரை மாநாட்டில் தருமபுரி மாவட்டத்திலிருந்து மக்கள் பெருந்திரளாக பங்கேற்க்க வேண்டும். மாவட்ட தலைவர் என். சுபேதார். 

July 4, 2025
பிஜேபியை கண்டித்து ஆர்பாட்டம்
தமிழ்நாடு

பிஜேபி அரசை கண்டித்து டில்லியில் தமிழக எம்.பி க்கள் போராட்டம் !

February 8, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

முரசு புயல்: வடதமிழகத்தில் கனமழை, பலத்த காற்று!

November 1, 2026
தமிழ்நாடு

போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!

November 1, 2026
தமிழ்நாடு

தேனி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம்: பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!

October 31, 2026
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் மறுநிர்ணயம்!

October 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?