தருமபுரியில் பட்டியில் பழங்குடி பொருளாதார விடுதலை மாநாடு
ஆதிதிராவிடர் வர்த்தக மற்றும் தொழில் தொலைநோக்கு பேரமைப்பு சார்பில், பட்டியில் மற்றும் பழங்குடியினர் பொருளாதார விடுதலை மாநாடு, தருமபுரி டி. என்.சி விஜய் மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைவர் தமிழழகன் நல்லய்யன் தலைமை வகித்தார்.
என். எஸ். ஐ. சி மண்டல பொது மேலாளர் ஸ்றீவத்சன், அறிவியல் ஆராய்ச்சி அலுவலர் ராஜா, இந்திய இரும்பு உருக்கு ஆணைய பொது மேலாளர் மணோஜ், தலைவர் தமிழ்செலவம்,தொழிலதிபர் கோவேந்தன் , ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

இம்மாநாட்டில், பட்டியில் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோர், வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள், தொடக்கநிலை நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோராக விரும்புவோர், மற்றும் தொழில்துறை, நிறுவனங்கள், தொடர்புடைய பங்குதாரர்களுடன் இணைந்து, நிலையான தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் தொழில்முனைவு மற்றும் நிறுவன வளர்ச்சிசந்தை அணுகல், மற்றும் வர்த்தக வாய்ப்புகள், அரசு திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் ஆதரவுநிதி, தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சிஸ்டார்ட்அப்கள், புதுமை மற்றும் புதிய தலைமுறை, தொழில்முனைவுதொழில் தொடர்புகள் மற்றும் கூட்டாண்மை அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி குறித்தும் இம்மாநாட்டில் பேசப்பட்டது. இம்மாநாட்டில் ஏராளமான பட்டியிலின பழங்குடி தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர்.

