தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள்,விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரணம் வழங்க கோரி இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட பொறுப்பாளர் பி .இரவி,
இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர்
ஜி. பச்சாகவுண்டர் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெ .பிரதாபன் கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசினார், எப்ஐடியூ தொழிற்சங்க பொறுப்பாளர் ஜி. மாதையன்,
தமிழ்நாடு கலை இலக்கிய மாமன்ற பொறுப்பாளர் வெ. பை .மாதையன், இந்திய மாதர் சங்க மாவட்ட பொறுப்பாளர்
ஈ. அலமேலு, இந்திய பழங்குடி மக்கள் சங்க மாவட்ட பொறுப்பாளர்
ஜி .ராஜகோபால், இந்திய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் என். பி. ராஜி,ஜி. சம்பத், இந்திய விவசாயிகள் சங்க கே .லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
தருமபுரி மாவட்டம் உலக அளவில் ஏற்பட்டுள்ள எல்நினோ பாதிப்பால் பாதிக்கப்பட்டு கோடை மழை, தென் மேற்கு மழை பொழிவு இல்லாத காரணத்தால் விவசாயிகள் சாகுபடி செய்த நிலக்கடலை,சோளம்,கம்பு,தீவன சோளம்,கேழ்வரகு,சாமை,திணை,வரகு,அவரை,துவரை,பாசிப்பயிறு, மக்காசோளம், போன்ற பயிர் வகைகளும் மேலும்
பணப்பயிர்களான நெல், வாழை, பருத்தி,கரும்பு,காய் -பழவகை பயிர்கள் அனைத்தும் வைகாசி- அடி பட்டத்தில் விதைத்தது எல்லாம் காய்ந்து கருகிவிட்டது
இதனால் விவசாயிகள்-விவசாய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தருமபுரி மாவட்டத்தினை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரண பணிகளை துவக்க வேண்டும் .வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சாகுபடி நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ 50,000/_ இழப்பீடு வழங்க வேண்டும், வறட்சியால் வேலை இழந்து வாடும் நிலமற்ற விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு வறட்சி நிவாரண தொகை ரூ 50,000/ வழங்க வேண்டும், தருமபுரி மாவட்டத்திற்கு வறட்சி சிறப்பு நிதியாக ரூ 500/- கோடி ஒதுக்கீடு செய்து வறட்சி நிவாரண பணிகள் துவங்க வேண்டும்,முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிலமற்ற ஆண்/பெண் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ 6,000/- ஒதுக்க வழங்க வேண்டும், கடந்த மூன்றும் காலமாகமுதியோர், மாற்றுத்திறனாளிகள்,விதவைகள், கணவனால் கைவிடப்பட்டதால் ஆகியவர்களுக் வழங்க வேண்டி மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படவில்லை இதனை உடனே வழங்க வேண்டும், நார்த்தம்பட்டி பட்டியிலன அருந்ததியர் கும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நில ஆர்ஜிதம் செய்த ஏ ரெட்டிஅள்ளி வருவாய் கிராம புல எண் 440/- 1B1C யில் இலவச வீட்டு மனை பட்ட வழங்க வேண்டும்.
இலளிகம் தியாகி ஆர் பச்சாகவுண்டர் நகரில் வாழ்த்து வரும் 36 குடும்பங்கள்
e- பட்டா வழங்க வேண்டி கடந்த ஒருவருடகாலமாக வழங்காமல் இருப்பதில் மீது நடவடிக்கை எடுத்து e-பட்டாவழங்க ஆவண செய்ய வேண்டும்,
வத்தல்மலை பழங்குடியினர்
நாட்டு கறவை மாடுகள் வாங்க 100 சதவீதம் மானிய திட்டத்தில் உடனே கறவை மாடுகள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் அலாவலகத்தில் வழங்கினர்.

