காலிப்பணியிடங்களை நிரப்பகோரி சுகாதார ஆய்வாளர்கள்சங்கம் ஆர்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சுகாதார ஆய்வாளர்களின் பதவி உயர்வு பணியிடங்களான தொழில்நுட்ப நேர்முக உதவியாளர்,நலக் கல்வியாளர் ,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ,மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர்,ஆகிய பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
பெருமளவு காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி கால நேரம் இன்றி ஈடுபட்டிருப்பதை கருத்தில் கொண்டு தீவிர தொழுநோய் கண்டறியும் முகாம்களை தள்ளி வைத்து வைக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் தீவிரத்தில் பிற துறை முத்திய பணிகளை முழுமையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காத போது சுகாதார ஆய்வாளர்களை மட்டும் பொறுப்பாக்குவதை கைவிட வேண்டும்.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமைவகித்தார்.மாவட்ட செயலாளர் நவநீதகிருஷ்ணன் ,மாநில தணிக்கையாளர் யாரப்பாஷா,மாநில அமைப்பு செயலாளர் செல்வம் ,மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமரன் ,மாவட்ட இணை செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் , மாவட்ட செயலாளர் ஏ.தெய்வானை,சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் ,முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் கரிகாலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

