தருமபுரி அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த செவிலியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தருமபுரி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஒப்பந்த செவிலியர் பணிக்கு கடந்த 12.09.2026 அன்று விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் (Accepted)*, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் (Temporary Withheld)* மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் (Rejected) ஆகியவற்றின் விவரங்கள் தருமபுரி மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இணையதள முகவரி: http://www.dharmapuri.nic.in
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் குறிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை கவனமாக பரிசீலித்து, அதற்குரிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் தேவையான ஆவணங்கள் / சான்றிதழ்களை சமர்ப்பிக்கவும்.
மேலும், நிராகரிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, தங்களது விண்ணப்பம் தொடர்பாக உரிய முறையீடு மற்றும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க ஒரு வாய்ப்பு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, Withheld மற்றும் Rejected விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் சமர்ப்பிக்கப்படாத சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்களை *05.10.2026 திங்கள் கிழமை அன்று பிற்பகல் 12.00 மணிக்குள்,* தருமபுரி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி / WhatsApp எண்ணின் மூலம் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மின்னஞ்சல் முகவரி – dpiddhs@gmail.com*
*Whatsapp எண் – 9080748314
மேலும், 05.10.2026 அன்று பிற்பகல் 12.00 மணிக்கு பின்னர் பெறப்படும் ஆவணங்கள் / முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலிய பணி நியமனம் என்பது முழுமையாக வெளிப்படைத்தன்மை மற்றும் தகுதியின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. விண்ணப்பதாரர்கள் செவிலியர் பணி தேர்வு மற்றும் பணி நியமனத்திற்காக எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும், பணம் அல்லது ஏதேனும் ஆதாயத்தை பெற்றுக் கொண்டு நியமன செயல்முறையில் தலையீடு செய்ய முடியும் எனக்கூறும் தனிநபர்கள் அல்லது இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

