இலளிகத்தில்
அமரர் பி சீனிவாசராவ் நினைவு தினம் அனுசரிப்பு
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம்
இலளிகம் கிராம ஊராட்சி
தியாகி ஆர் .பச்சாகவுண்டர் நினைவு படிப்பகம் முன் இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
விவசாயிகள் – விவசாய தொழிலாளர்களின் விடிவெள்ளி
தோழர் பி சீனிவாசராவ் அவர்களின்
65 – நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்விற்கு இலளிகம் கட்சி கிளை துணைச் செயலாளர் ஈ.அலமேலு தலைமை வகித்தார் நார்தம்பட்டி கிளைச் செயலாளர் என். பி .ராஜி முன்னிலை வகித்தார். தோழர் பி.சீனவாசராவ் அவர்களின் உருவப்படத்திற்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர்
ஜெ .பிரதாபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அவர்குறித்து உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்சியில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்ந்த ஜெ. காளியம்மாள் ,வீரம்மாள், கோவிந்தம்மாள்,பவானி,
சின்னசாமி, ராஜா ஆகியவர்கள் கலந்துக் கொண்டனர்,

