நில அளவை அலுவலர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து தருமபுரியில் நில அளவை அலுவலர் ஒன்றிப்பு ஆர்ப்பாட்டம
நில அளவை அலுவலர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் உத்தரவுகளின் அடிப்படையில் பணியாற்றிய சார்ஆய்வாளர் ஜெகன்குமார் செப் – 21.அன்று பணிக்காக சென்றபோது கடுமையாக தாக்கப்பட்டார். மாவட்ட நிர்வாகத்தின் தலையீட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதிலும், குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலை குறித்து நில அளவை ஒன்றிப்பு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், செப் 24. அன்று நில அளவைப் பணியை முடித்துவிட்டு பேருந்துக்காக காத்திருந்த குறுவட்ட அளவர் ஜெயலட்சுமி கடுமையாக தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு. தற்போது தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதை வரவேற்கும் அதேவேளையில், அரசு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில், செப் 24. அன்று நில அளவைப் பணிக்குச் சென்ற வட்ட சார் ஆய்வாளர் தங்கம் மற்றும் குறுவட்ட அளவர் பிரிசில்லா ஆகியோர் மீது ஒருவர் அவதூறாகப் பேசியதுடன், மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் தாக்குதலால் இருவருக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதுடன். இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சிஎஸ்ஆர் பெறப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலனுக்காக களப்பணியில் ஈடுபடும் நில அளவை அலுவலர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் சூழ்நிலை கவலைக்குரியது. அரசு ஊழியர்கள் அச்சமின்றி தங்களது கடமையை மேற்கொள்ளும் வகையில் உடனடியாக பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்துகிறது.
மேலும், அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன். தேவையான இடங்களில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஒன்றிப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நில அளவை அலுவலர்களுக்கு பணியிடத்தில் முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்.
நில அளவை அலுவலர்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக
இயற்ற வேண்டும்.தேனி மற்றும் திண்டுக்கல் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது
விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கு.சின்னராசு தலைவர்தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் மா.முருகன்,முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கட்டேசன் , ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.தெய்வானை , கிராமநிர்வாக உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் ரங்கன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

