மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழகத்தின் 8 பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள் பொதுமக்கள் கேட்பை பதிவு செய்ய தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அழைப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தமிழகத்தின் 8 பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள் பொதுமக்கள் கேட்பை பதிவு செய்ய தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அழைப்பு
அரசு நல திட்டம்

தமிழகத்தின் 8 பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள் பொதுமக்கள் கேட்பை பதிவு செய்ய தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அழைப்பு

Social Vision
Last updated: 2026/09/25 at 9:15 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

தமிழகத்தின் 8 பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள்

பொதுமக்கள் கேட்பை பதிவு செய்ய தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அழைப்பு

சென்னை, செப். 25:

Contents
தமிழகத்தின் 8 பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள்பொதுமக்கள் கேட்பை பதிவு செய்ய தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அழைப்புபொதுமக்களின் தேவையை அறிய பிரத்யேக இணையதளம்

தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தலைமையில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சுயநிதித் திட்டத்தின் கீழ், மாநிலத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

2026–2027 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கை கூட்டத்தொடரின்போது இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் அண்ணா நகர், புரசைவாக்கம், நந்தனம், எர்ணாவூர், கடலூர் மாவட்டத்தில் குண்டுசாலை, மதுரை மாவட்டத்தில் எல்லீஸ் நகர், திருவள்ளூர் மாவட்டத்தில் திருமழிசை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வல்லன்குமாரன்விளை ஆகிய 8 இடங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

தமிழகம் முழுவதும் செப்-26 நியாய விலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்
தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்
7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

பொதுமக்களின் தேவையை அறிய பிரத்யேக இணையதளம்

இத்திட்டங்களைத் திட்டமிடுவதற்கு முன்பாக பொதுமக்களின் தேவையை (Demand Assessment) அறிந்து, அதற்கேற்ப குடியிருப்புகளை அமைக்கும் நோக்கில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரத்யேக இணையவழி தளத்தை (Portal) உருவாக்கியுள்ளது.

இந்த இணையவழி தளத்தின் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான பகுதி, குடியிருப்பு வகை மற்றும் தொடர்புடைய பிற தேவைகள் குறித்த விவரங்களைப் பதிவு செய்யலாம்.

இந்தப் பதிவு பொதுமக்களின் தேவையை மதிப்பீடு செய்வதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் வீடு ஒதுக்கீடு செய்வதில் எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தேவைக் கணக்கீட்டிற்கான பதிவை வெற்றிகரமாக மேற்கொண்டவர்களுக்கு, திட்டம் செயல்படுத்தப்படும் போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் தேதி குறித்த விவரங்கள், அவர்கள் பதிவு செய்துள்ள செல்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

எனவே, மேற்கண்ட பகுதிகளில் குடியிருப்புகளைப் பெற ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnhb.tn.gov.in-ஐ அணுகி, தங்களது குடியிருப்பு தேவையை விரைவாகப் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TAGGED: #DemandAssessment #TNHB #HousingScheme #TamilNaduHousingBoard #Chennai #Cuddalore #Madurai #Tiruvallur #Kanniyakumari #SocialVisionTV #TamilDigitalMedia, #தமிழ்நாடு #தமிழ்நாடு_வீட்டுவசதி_வாரியம் #வீட்டுவசதி #குடியிருப்பு_திட்டங்கள் #புதிய_குடியிருப்புகள் #வீடு #சுயநிதி_திட்டம் #பொதுமக்கள் #கேட்பறிதல், தமிழகத்தின் 8 பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள் பொதுமக்கள் கேட்பை பதிவு செய்ய தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அழைப்பு
Social Vision September 25, 2026 September 25, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

விளையாட்டு

தருமபுரியில் கபடி போட்டிகள்105 ஆண்கள்- பெண்கள் அணிகள் பங்கேற்பு

October 26, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

இலவச இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

August 19, 2025

நூறு நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி 

April 3, 2026
ஆன்மிகம்

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு இறுதிகட்டப் பணிகளை ஆய்வு செய்த கனிமொழி கருணாநிதி எம்.பி

June 28, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்  ஜூலை 11 முதல் செப்- 4 வரை 70 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.  ஆட்சியர் கி.சாந்தி தகவல் 

July 12, 2024
Uncategorized

தொப்பூர் சோதனை சாவடியில் 2.61 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்.

March 27, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் செப்-26 நியாய விலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

September 25, 2026
அரசு நல திட்டம்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்

August 25, 2026
அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?