அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பபு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 11/08/2026 முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக மாணாக்கர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர். 20/08/2026 உடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், மாணாக்கர் நலன் கருதி விண்ணப்பப் பதிவு செய்யத் தவறிய மாணாக்கர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 31/08/2026 முதல் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.
20/08/2026 வரை விண்ணப்பித்த மாணாக்கர்களுக்கு தர வரிசையின் அடிப்படையில் மாணாக்கர் சேர்க்கை 27/08/2026 முதல் தொடங்கி எம்.எட். நடைபெறும் எனவும், மாணாக்கர்களுக்கான வகுப்புகள் 01/09/2026-ல் தொடங்கும். மேலும் விண்ணப்பித்த மாணாக்கர்களுக்கு சேர்க்கைக்கான விவரங்கள் SMS மற்றும் மின்னஞ்சல் (E-mail) வாயிலாக அனுப்பப்படும்.
இந்நிலையில், ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணாக்கர் இரண்டாம் கட்ட சேர்க்கைக்கு தொடர்ந்து விண்ணப்பிக்கும் வகையில் 10/09/

