மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

Social Vision
Last updated: 2026/08/15 at 10:50 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இயற்கை நீதியின் அடிப்படையில் சமத்துவத்திற்கான கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

அரசுத் துறைகளின் தனியார்மயத்தைத் தடுத்து நிறுத்துதல், தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துதல், ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்சிங் உள்ளிட்ட பணிமுறைகளில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவதைத் தடுத்தல், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலும் ஒழித்து இயந்திரமயமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும், சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க மத்திய சட்டம் இயற்றுதல், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவு வழங்குதல், உயர்கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாட்டைத் தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டுவருதல், அரசுப் பள்ளிகள் மூடப்படுவதைத் தடுத்தல், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

இதையும் படிங்க

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல், மதம் மாறிய கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலித்துகளுக்கும் பட்டியல் சாதி அந்தஸ்து வழங்குதல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துதல், எஸ்.சி., எஸ்.டி. பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துதல், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்கு அரசு கொள்முதலில் உரிய வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து கையெழுத்துகள் பெறப்பட்டன.

அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி. டில்லிபாபு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எம். முத்து, ஒன்றியச் செயலாளர் பி. குமார், வட்டச் செயலாளர் பி.வி. மாது, பொருளாளர் சங்கு,ஜெயகாந்தன் ,கெம்பன்,கோபால் ,சிஐடியு நிர்வாகி சி. ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எஸ். தேவராசன் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஏ. சேகர், வட்டச் செயலாளர் ஜே.பி. சுப்பரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தருமபுரியில் மாவட்டப் பொருளாளர் வழக்கறிஞர் டி. மாதையன் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் நிர்வாகிகள் சி. காவேரி, எம். தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

TAGGED: சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்
Social Vision August 15, 2026 August 15, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

காரிமங்கலம் அருகே காட்டுயானை தாக்கியதில் இளம்பெண்படுகாயம் 

March 2, 2024
சினிமா

ரஜினிகாந்த் நடிக்கும்  தலைவர் 171′ படத்தின் டைட்டில் டீஸர் நாளை வெளியீடு 

April 21, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

பாலக்கோடு அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா:530 மாணவர்களுக்கு கே.பி.அன்பழகன் எம்எல்ஏ. பட்டம் வழங்கினார்.

March 14, 2024
மாவட்டங்கள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு.

February 10, 2024
கல்வி & வேலைவாய்ப்புதமிழ்நாடு

சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு   தருமபுரியில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சி 

June 26, 2024
தமிழ்நாடு

தருமபுரி மருத்துவக்கல்லூரி தூய்மைபணியாளர்களுக்கு வாரவிடுப்பு வழங்க கோரி ஏஐசிசிடியு ஆட்சியரிடம் மனு. 

July 28, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?