மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > 7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்
அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

Social Vision
Last updated: 2026/08/12 at 5:50 PM
Social Vision
Share
3 Min Read
SHARE

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

சென்னை, ஆக. 12:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடுகள் மற்றும் மனைகளை இணையவழியில் விற்பனை செய்வதற்கான Online Allotment Portal-ஐ வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் இன்று (12.08.2026) சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூட்டரங்கில் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி தொடங்கப்பட்டுள்ள இந்த இணையவழி விற்பனைத் தளம் மூலம், வீட்டுவசதி வாரியத்தின் பல்வேறு திட்டங்களில் விற்பனைக்கு உள்ள வீடுகள் மற்றும் மனைகளை பொதுமக்கள் வெளிப்படையான முறையில் இணையவழியில் தேர்வு செய்து விண்ணப்பிக்கவும், முன்பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் கடந்த ஆண்டு 2,630 அலகுகள் மட்டுமே மின்னணு முறையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது இதுவரை இல்லாத அளவாக பல்வேறு திட்டங்களில் 7,659 அலகுகள் விற்பனைக்கு உள்ளன.

இதில், 21.08.2026 முதல் குலுக்கல் முறையில் 2,842 அலகுகளுக்கும், 24.08.2026 முதல் முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமை (FCFS) அடிப்படையில் 2,184 அலகுகளுக்கும், 25.08.2026 முதல் பொது ஒதுக்கீடு (Common Pool) முறையில் 1,749 அலகுகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதையும் படிங்க

தமிழகம் முழுவதும் செப்-26 நியாய விலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்
தமிழகத்தின் 8 பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள் பொதுமக்கள் கேட்பை பதிவு செய்ய தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அழைப்பு
தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்

இதற்கான விவரங்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் Online Portal-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக, இணையதளத்தில் உள்நுழைவதற்கான பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இணையதளத்தில் உள்ள விவரங்களின் அடிப்படையிலோ அல்லது சம்பந்தப்பட்ட திட்டப் பகுதிக்கு நேரடியாகச் சென்றோ தங்களுக்கு விருப்பமான அலகினைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும், முன்பதிவுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு ஏதுவாக வங்கிப் பணப் பரிவர்த்தனை வரம்பை சரிபார்த்து நிர்ணயித்துக் கொள்ளவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு பிரிவிலும் விண்ணப்பிப்பவர்கள், அந்தப் பிரிவுக்கான தகுதி மற்றும் நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இதுதவிர, விற்பனைக்குத் தயாராக உள்ள 884 வணிக அலகுகள் — கடைகள், பிரதான வணிக மனைகள் மற்றும் பொது பயன்பாட்டு மனைகள் — e-Tender cum e-Auction முறையில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கான மின்னணு ஏல விண்ணப்பங்கள் 25.08.2026 முதல் 24.09.2026 வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கான தளம் தமிழ்நாடு e-Tenders Portal ஆகும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இந்த வெளிப்படையான இணையவழி செயல்பாடு, பொதுமக்கள் வீடுகள் மற்றும் மனைகளை வாங்குவதற்கான வாய்ப்புகளை பெருமளவில் அதிகரிப்பதுடன், விற்பனை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்கிறது. மேலும், விற்பனைக்கு உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு இந்த ஆண்டில் விலை உயர்வு எதுவும் செய்யாமல் விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட தேதிகளுக்குள் இணையவழி விற்பனைத் தளம் மூலம் விண்ணப்பித்து அல்லது முன்பதிவு செய்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வீட்டுவசதி சேவைகளைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிகழ்வில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் இரா. கிர்லோஷ் குமார், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் வே. சிவா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சு. பிரபாகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

TAGGED: 659 வீடு, 7, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்
Social Vision August 12, 2026 August 12, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1 இலட்சத்து 26 ஆயிரம் கனஅடிநீர் வரத்து 

July 27, 2025
ஆன்மிகம்

ஆலமரத்தூர் கிராமத்தில் ஓங்காளியம்மன் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்‌

February 7, 2024
சாதனையாளர்கள்

இந்திய நாட்டு சுதந்திரத்திற்க்காக வாழ்நாளை அர்பணித்த தியாகி சுப்பிரமணியசிவா

December 19, 2023
Uncategorized

நூறுநாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

March 25, 2025
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவு  பென்னாகரத்தில் 16  மில்லிமீட்டர் மழை

July 16, 2024
தமிழ்நாடு

பழங்குடியினரின் அனுபவ நிலங்களுக்கு வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்

July 31, 2026

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் செப்-26 நியாய விலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

September 25, 2026
அரசு நல திட்டம்

தமிழகத்தின் 8 பகுதிகளில் புதிய குடியிருப்பு திட்டங்கள் பொதுமக்கள் கேட்பை பதிவு செய்ய தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அழைப்பு

September 25, 2026
அரசு நல திட்டம்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்

August 25, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?