மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

Social Vision
Last updated: 2026/08/09 at 5:02 PM
Social Vision
Share
3 Min Read
SHARE

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை–2026 கால அட்டவணையின்படி, இரண்டாம் சுற்றுக்கான தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்யும் பணி நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து, தங்களுக்கு கிடைத்த இடத்தை ஏற்றுக்கொண்ட 40,299 மாணாக்கர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டாணைகளும், ஒதுக்கப்பட்ட இடத்தை ஏற்றுக்கொண்டு மேல்நோக்கிய நகர்வுக்கு (Upward Movement) விருப்பம் தெரிவித்த 10,648 மாணாக்கர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டாணைகளும் வழங்கப்பட்டுள்ளன.

Contents
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்ஆகஸ்ட் 13-க்குள் சேர்க்கை பெற வேண்டும்28,979 மாணாக்கர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடுசெப்டம்பர் 3 முதல் துணைக் கலந்தாய்வுபுகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு உதவி மையம்

இதில், அரசு பள்ளிகளில் பயின்ற 6,914 மாணாக்கர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டாணைகளும், 2,647 மாணாக்கர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டாணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாணாக்கர்களுக்கு ஒதுக்கீட்டாணைகள் வெளியிடுவதற்கு முன்பாக, கடந்த 06.08.2026 அன்று 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் இருந்து 33 பேராசிரியர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு, மாணாக்கர்களின் தரவரிசை மற்றும் விருப்பப் பட்டியலின் அடிப்படையில் ஒதுக்கீடுகள் சரியாக வழங்கப்பட்டுள்ளனவா என்பது நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது.

ஆகஸ்ட் 13-க்குள் சேர்க்கை பெற வேண்டும்

தற்காலிக (Tentative) ஒதுக்கீட்டாணை பெற்ற மாணாக்கர்கள், தங்களது விருப்பத் தேர்வில் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு வசதி மையமான TFC (Tamil Nadu Facilitation Centre) மையத்திற்கும், இறுதி (Provisional) ஒதுக்கீட்டாணை பெற்ற மாணாக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிக்கும் நேரில் சென்று, 09.08.2026 முதல் 13.08.2026 வரை அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, கல்விக் கட்டணத்தைச் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.
அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

13.08.2026-க்குள் TFC மையத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்காத மாணாக்கர்களுக்கும், ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேராத மாணாக்கர்களுக்கும் வழங்கப்பட்ட இடங்கள் தானாகவே (Default) ரத்து செய்யப்படும். அந்த இடங்கள், அதே இரண்டாம் சுற்றில் மேல்நோக்கிய நகர்வுக்காகக் காத்திருக்கும் மாணாக்கர்களுக்கு ஒதுக்கப்படும்.

28,979 மாணாக்கர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு

இதுவரை நடைபெற்ற சிறப்புக் கலந்தாய்வு மற்றும் முதல் சுற்றுக் கலந்தாய்வில், 28,979 மாணாக்கர்களுக்கு ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டு, அவர்கள் கல்லூரிகளில் சேர்க்கை பெற்று வருகின்றனர்.

B.Arch. கலந்தாய்வில் பொதுப் பிரிவில் 622 மாணாக்கர்களுக்கும், அரசு பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 40 மாணாக்கர்களுக்கும் ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டு, சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மாணாக்கர்களுக்கு இறுதியாக ஒதுக்கப்பட்ட இடங்களின் விவரங்கள் வெளிப்படைத்தன்மையுடன் www.tneaonline.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

செப்டம்பர் 3 முதல் துணைக் கலந்தாய்வு

B.E., B.Tech. மற்றும் B.Arch. துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள், +2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் மற்றும் பொதுக் கலந்தாய்வில் விண்ணப்பிக்காத மாணாக்கர்களிடமிருந்து 17.08.2026 முதல் 31.08.2026 வரை பெறப்படும்.

துணைக் கலந்தாய்வு 03.09.2026 முதல் 07.09.2026 வரை நடைபெறும்.

மாணாக்கர்கள் தங்களது விருப்பப் பட்டியலில் தங்களுக்கு விருப்பமான எத்தனை கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். இதனை திறம்படக் கையாளும் வகையில், மேம்பட்ட திறன் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புடன் கூடிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு உதவி மையம்

ஒதுக்கீடு தொடர்பான புகார்கள் இருப்பின் Indote@tndote.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம்.

கலந்தாய்வு மற்றும் ஒதுக்கீடு தொடர்பான விளக்கங்கள் தேவைப்படும் மாணாக்கர்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள 110 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்களைத் தொடர்புகொண்டு அல்லது நேரில் சென்று தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். சேவை மையங்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் www.tneaonline.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், மாணாக்கர்களின் கலந்தாய்வு மற்றும் ஒதுக்கீட்டாணை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 10 இணைப்புகளுடன் செயல்படும் இந்த அழைப்பு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-0110 ஆகும்.

மாணாக்கர்கள் theacare@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தங்களது சந்தேகங்களைத் தெரிவித்து விளக்கம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TAGGED: 508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60
Social Vision August 9, 2026 August 9, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  பெறுமிதம்.

June 15, 2024
தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தொல்லியல்

தொழிலாளர், விவசாயிகள் விரோத மோடி அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் மறியல்

August 10, 2026
அரசியல்வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் 33 சதவீதம் குறைப்பு: எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும். பாமக தலைவர் மரு.அன்புமணி 

July 6, 2024
தமிழ்நாடு

கோழியை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை – சி.சி.டி.வி.காட்சி வைரல் 

May 30, 2024

மேலும் படிங்க

இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!

September 4, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.

August 27, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 23, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?