மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா 1,910 பயனாளிகளுக்கு ரூ.19.63 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள்  அமைச்சர் ப.ராஜ்குமார் வழங்கினார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா 1,910 பயனாளிகளுக்கு ரூ.19.63 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள்  அமைச்சர் ப.ராஜ்குமார் வழங்கினார்.
தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா 1,910 பயனாளிகளுக்கு ரூ.19.63 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள்  அமைச்சர் ப.ராஜ்குமார் வழங்கினார்.

Social Vision
Last updated: 2026/08/02 at 3:09 PM
Social Vision
Share
7 Min Read
SHARE
ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா 1,910 பயனாளிகளுக்கு ரூ.19.63 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள்  அமைச்சர் ப.ராஜ்குமார் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல்லில் 3 நாட்கள் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவினை  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் . ப.ராஜ்குமார்  (02.08.2026) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.7.48 கோடி மதிப்பீட்டில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 1,910 பயனாளிகளுக்கு ரூ.19.63 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர்வே.சரவணன்,தலைமைவகித்தார்.இவ்விழாவில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்  முன்னிலை வகித்தார்.
ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவானது இன்று (02.08.2026) தொடங்கி 04.08.2026 வரை மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றது. ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் அவர்கள் இன்று திறந்துவைத்து, பார்வையிட்டார்கள்.
மேலும், இவ்விழாவில் சுற்றுலாத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, பட்டு வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள், உணவு பாதுகாப்புத்துறை, வனத்துறை, சுற்றுசூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சுமார் 23 துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை பணி விளக்க கண்காட்சி அரங்குகளை  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார்  திறந்துவைத்து, பார்வையிட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.7.48 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற புதிய 23 திட்டப்பணிகளை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்  ப.ராஜ்குமார் திறந்து வைத்தார்கள்.
தொடர்ந்து, வருவாய்த் துறையின் சார்பில் 356 பயனாளிகளுக்கு ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டு மனைப்பட்டா, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, தற்காலிக இயலாதோருக்கான உதவித்தொகை, புதிய குடும்ப அட்டைகள், பட்டா மாற்றம், தடையின்மைச் சான்று மற்றும் மரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3.75 இலட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசன கருவிகள், நிலப்போர்வை அமைத்தல், நிரந்தர காய்கறி கல்பந்தல் அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 1543 மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு ரூ.18.50 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கடன் உதவிகளும், தாட்கோ சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் துரித மின் இணைப்பு திட்டம் (Fast Track Power Supply Scheme) மூலம் மானியத் தொகைகளும்,
வேளாண்மைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1.38 இலட்சம் மதிப்பீட்டில் நெல் இயந்திர நடவு, துவரை நாற்று நடவு, நுண்ணீர் பாசன கருவிகள்  என மொத்தம் 1910 பயனாளிகளுக்கு ரூ.19.63 கோடி (19,63,63,382/-) மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்  ப.ராஜ்குமார்  வழங்கினார்கள்.
இவ்விழாவில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது:
தருமபுரி மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்கும் ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா சுற்றுலாத்துறையின் சார்பில் இன்று தொடங்கி வருகின்ற 04.08.2026 வரை 3 நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இயற்கை போற்றும் நமது தமிழர் பண்பாட்டின் பெருமிகு திருநாளான ஆடிப்பெருக்கு விழாவில் உங்களுடன் கலந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். “ஆடிப் பட்டம் தேடி விதை” என்ற பழமொழிக்கு ஏற்ப, நமது வாழ்வாதாரமான விவசாயமும் உழவுத் தொழிலும் செழித்தோங்க நீர்நிலைகளை வணங்கி நன்றி செலுத்தும் உன்னதமான நாள் இது. நமக்கு வாழ்வளிக்கும் காவிரித் தாய்க்கும், இயற்கைக்கும் நாம் காட்டும் நன்றியுணர்வே இந்த ஆடிப்பெருக்கு விழா.
ஆடிப்பெருக்கு என்பது தமிழர்களின் வாழ்வியல் தத்துவம் இயற்கையோடும் நீரோடும் விவசாயத்தோடும் இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்களின் அறிவையும் நன்றி உணர்வையும் எடுத்துக்காட்டும் திருநாள். ஆடி மாதத்தில் பருவ மழை காரணமாக ஆறுகள் நிரம்பி வழியும், அந்தநீரையே விவசாயத்திற்கும், குடிநீருக்கும், மனித வாழ்விற்கும் ஆதாரமாக அமைகிறது. இயற்கை நமக்கு அளித்த இந்த அருள் கொடைக்கு நன்றி செலுத்தும் நாளாகவே நம் முன்னோர்கள் ஆடிப்பெருக்கு நாளாக கொண்டாடினார்கள். அதனை நாம் பதினெட்டாம் பெருக்கம் என்றும் அழைக்கின்றோம்.
நம் முன்னோர்கள் நீரை வெறும் இயற்கை வளமாக பார்கவில்லை, அதனை நாகரிகத்தின் அடையாளமாக கருதினர். உலக முழுவதும் நீர் ஆதாரத்தை தேடிக்கொண்டு இருந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், அணைகள் அமைத்து ஒவ்வொரு மழைத்துளியையும் சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தி சிறந்த நீர் மேலாண்மை முறையை உருவாக்கியவர்கள் அந்த உயர்ந்த பாரம்பரியத்தை நினைவூட்டும் நாள் தான் ஆடிப்பெருக்கு ”நீரின்றி அமையாது உலகு” என்று திருவள்ளூர் கூறியது போல தண்ணீர் என்பது ஒரு வளம் மட்டுமல்ல அது உயிரின் அடிப்படை இன்று காலநிலை மாற்றம், நீர் பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர்கொண்டு வரும் இந்த காலத்தில் ஆடிப்பெருக்கு நமக்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்கிறது.
நீர் ஆதாரத்தை மதிப்போம், இயற்கையை பாதுகாப்போம். விவசாயத்தை வளர்ப்போம் வருங்கால தலைமுறைக்கு வளமான தமிழ்நாட்டை விட்டு செல்வோம். இன்று இந்த விழா நடைபெறும் ஒகேனக்கல் தமிழ்நாட்டின் இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும். காவிரி ஆறு கம்பிரமாக அறுவியாக கொட்டும் இந்த மண்ணை தென்னிந்தியாவின் நயாகரா என்று பெருமையுடன் அழைக்கின்றோம். இயற்கை எழிலும், நீரின் பெருமையும், ஒன்றாக இனைந்து இருக்கும் ஒகேனக்கல் தருமபுரி மாவட்டத்தின் அடையாளமாக விளங்குகிறது.
தருமபுரி என்பது உழைப்பை நம்பி வாழும் விவசாயிகளின் மண். இந்தியா முழுவதும் மாம்பழம் மாவட்டம் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த மாவட்டத்தின் வளர்ச்சியும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் காவிரி நதியின் நீர் வளத்துடன் நெருங்கிய தொடர்புடையது. எனவே நீரின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் ஆடிபெருக்கு விழாவினை ஒகேனக்கல்லில் கொண்டாடுவது பொருத்தமானது ஆகும்.
இந்த நன்நாளில் காவிரி என்றும் வற்றாமல் பெருக வேண்டும் ஒகேனக்கல் என்றும் செழித்து விளங்க வேண்டும். தருமபுரி மாவட்டம் விவசாயம், சுற்றுலா, தொழில் மற்றும் கல்வி என அனைத்து துறைகளிலும் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன். இத்தகைய சிறப்பு வாய்ந்த நன்நாளில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் உங்கள் வாழ்கை தரத்தை உயர்த்தவும், உங்கள் குடும்பங்களின் எதிர்காலத்தை வளப்படுத்தவும் உறுதுணையாக இருக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு மக்களின் நலனே முதன்மை என்ற உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் சமூகத்தின் கடைசி மனிதரையும் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் உறுதியான கொள்கை ஆகும். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சார்பில் பாதுகாப்பான வீடுகள், தரமான அடிப்படை வசதிகள், தூய்மையான மற்றும் நவீன நகரங்கள், குடிநீர், சாலை, கழிவுநீர் வசதிகள் மேம்படுத்த பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே நமது அரசின் முக்கிய நோக்கமாகும். இன்று அரசு நலத்திட்ட உதவிகள் பெறும் அனைத்து பயனாளிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 132 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACCS) மற்றும் 03 மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் (LAMP) 01.05.2025 முதல் 28.02.2026 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளில் தகுதி வாய்ந்தோர் பட்டியல்படி 53,070 விவசாயிகளுக்கு ரூ.218.16 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டும் அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டும்.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கும் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் இந்த விழாவை சிறப்பாக சிறப்பிக்க வந்துள்ள பொதுமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இனிய ஆடிபெருக்கு திருநாளில் தமிழ்நாட்டின் ஆறுகள் வற்றாமல் பெருகட்டும் நமது ஏரிகளும், குளங்களும் நிரம்பி வழிந்து விவாசயம் செழித்து தருமபுரி மாவட்டம் வளமாகி தமிழ்நாடு செழிக்கட்டும். மக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் அமைதியும் மகிழ்ச்சியும் வளமும் பெருகட்டும். இந்த ஆடிபெருக்கு நிகழ்ச்சியிலே நானும் கலந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ப.ராஜ்குமார் அவர்கள் தெரிவித்தார்கள்.
மேலும், இந்த ஆடிப்பெருக்கு விழாவினை பொதுமக்கள் கண்டு களிக்க 02.08.2026 இன்று பேண்டு இசை, மங்கள இசை, பரதநாட்டியம், சிலம்பாட்டம், பம்பை இசை, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கிராமிய கலை நிகழ்ச்சி உள்ளிட்ட 10 வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
 03.08.2026 இரண்டாம் நாள் அன்று பரத நாட்டிய நிகழ்ச்சி, பம்பை இசை, தெருக்கூத்து, இசைக்குழு இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட 8 வகையான கலைநிகழ்ச்சிகளும் மற்றும் 04.08.2026 முன்றாம் நாள் நிகழ்ச்சியாக கிராமிய இசை நிகழ்ச்சி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சி மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட 6 வகையான கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற உள்ளது.
இவ்விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், மாவட்ட வருவாய் அலுவலர்  ஆர்.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமதி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் ஜார்ஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன், கலை பண்பாட்டு துறை உதவி இயக்குநர் சு.சங்கரராமன், பென்னாரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, உதவி சுற்றுலா அலுவலர் சி.லவிஷா, அனைத்து துறை சார்ந்த அரசு தலைமை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
TAGGED: 910 பயனாளிகளுக்கு ரூ.19.63 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள்  அமைச்சர் ப.ராஜ்குமார் வழங்கினார்., ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா 1
Social Vision August 2, 2026 August 2, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

பாலக்கோட்டில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகள் இயங்க தடை, அபராதம் .

September 21, 2024
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 16.7மில்லி மீட்டர் சராசரி மழை அளவு  

October 22, 2025
மாவட்டங்கள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி,கலை நிகழ்ச்சி-பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு

January 31, 2025
அரசியல்

மதிமுக மாநில நிர்வாக குழு கூட்டததில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள் 

June 30, 2025
ஆரோக்கியம்

தருமபுரியில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி 

February 4, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்  ஜூலை 11 முதல் செப்- 4 வரை 70 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.  ஆட்சியர் கி.சாந்தி தகவல் 

July 12, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.

August 18, 2026
தமிழ்நாடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

August 13, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

முதலமைச்சர் கோப்பை–2026 விளையாட்டுப் போட்டி:ஆகஸ்ட் 6 முதல் இணையதளத்தில் பதிவு தொடக்கம்

August 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?