மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

Social Vision
Last updated: 2026/07/05 at 3:34 AM
Social Vision
Share
3 Min Read
SHARE

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் தருமபுரி மாவட்டப் பேரவைக் கூட்டம், தருமபுரி மருந்து வணிகர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு. முகமது இலியாஸ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கோ. கோபிநாத் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி. பிரின்ஸ் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன் கூட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார்.

மாவட்டச் செயலாளர் வெ. தர்மன் செயலாளர் அறிக்கையை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் கே. வினோத் குமார் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ச.இளங்குமரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கண்ணன், ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உதவி இயக்குநர்கள் விமல் ரவிக்குமார், வேடியப்பன், ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஜி. நந்தகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதையும் படிங்க

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 
பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

மாவட்ட நிர்வாகிகள் பெ. கிருஷ்ணமூர்த்தி, இ. பாலகுமாரன், எம். இராஜசேகரன், சந்தோஷ் குமார், மார்கரெட், சக்கரைவேல் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ந.திருவேரங்கன் நிறைவுறையாற்றினார்.

இதனை தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக மு.முகமது இலியாஸ் மாவட்ட செயலாளராக வெ.தர்மன் பொருளாளராக கே.வினோத்குமார் மாநில செயற்குழு உறுப்பினராக பிரின்ஸ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள், ஓட்டுநர்கள், பதிவுரு எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவுக் காவலர்கள் மற்றும் ஊராட்சிச் செயலர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கருணை அடிப்படையிலான பணி நியமன ஒதுக்கீட்டை 25 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்த அரசாணையை ரத்து செய்து, மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். மேலும், காலஞ்சென்ற அனைத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தின் மக்கள் தொகை மற்றும் நிர்வாகத் தேவைகளை கருத்தில் கொண்டு, இண்டூர், தீர்த்தமலை, மாரண்டஅள்ளி, பெரியாம்பட்டி ஆகிய இடங்களில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களையும், 128 புதிய கிராம ஊராட்சிகளையும் உருவாக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்–2-ஐ விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், அத்திட்டத்தை திறம்பட செயல்படுத்த தனி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

வளர்ச்சித் துறையில் பணிமேற்பார்வையாளர் நிலையில் 7 ஆண்டுகள் பணியாற்றிய அனைவருக்கும் இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு வழங்க அரசாணை வெளியிட வேண்டும் என்றும், தருமபுரி மாவட்டத்தில் விடுபட்டுள்ள 8 மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

10 ஆண்டுகள் கிராம ஊராட்சிச் செயலராக பணியாற்றிய அனைவருக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி, இளநிலை உதவியாளர்களாகத் துறையில் நியமிக்க வேண்டும் என்றும், விபி–ஜி ராம் ஜி திட்டத்திற்குத் தனி ஊழியர் கட்டமைப்பை உருவாக்கி பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

TAGGED: தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்
Social Vision July 5, 2026 July 5, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
மாவட்டங்கள்

உழைப்பாளி மக்களின் நிலத்தை செங்கொடி இயக்கம் பாதுகாக்கும்  சிபிஎம் மாநிலசெயற்குழு உறுப்பினர்  டி.ரவீந்திரன் பேச்சு 

June 20, 2024
அரசியல்

விசிக தலைவர் தொல் .திருமாவளவன் பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து 

June 11, 2024
மாவட்டங்கள்

ஐடிஐ படித்தவர்களுக்கு பணி ஆணை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்

June 11, 2024
இந்தியா

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரிய கணக்கெடுப்பு ஒன்றிய அரசு காலம் தாழ்த்தாமல் நடத்த வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின்.

June 26, 2024
தமிழ்நாடு

ஸ்பெயின் சுற்றுப்பயணம் வெற்றிப்பயணமானது ரூ. 3,440 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

February 7, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?