7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.
தருமபுரி அடுத்த குண்டல்பட்டியில் இயங்கி வரும் பச்சமுத்து மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் +2 முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி பசுமை தாயகம் அமைப்பு சார்பில் நடைபெற்றது.
பிளஸ்டூ முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சிக்கு கல்வி குழும தலைவர் பாஸ்கர் வரவேற்புரை ஆற்றினார். தருமபுரி கோட்டாட்சியர் காயத்ரி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.

இதில் பசுமை தாயக தலைவரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான செளமியா அன்புமணி தலைமை வகித்து மாணவிகளிடம் கலந்துரையாடினார்,
மேலும் பேசுகையில் :
மாணவிகளின் எதிர்காலம் என்பது அவர்களின் கல்வி மூலமே அமைகிறது
அத்தகையகல்வியைபெறமாணவிகளுக்கு பசுமை தாயகம் உறுதுணையாக உள்ளது . இந்தியாவில் மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் ஒரு வருடத்தில்மருத்துவராக பட்டம் பெற்றுவருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஒரு வருடத்தில் 8 லட்சம் மாணவர்கள் பிளஸ்டூ தேர்வு எழுதுகின்றனர்.அதில் 7.5 லட்சம் மாணவர்கள்தேர்ச்சிபெறுகின்றனர்.தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேர 11 ஆயிரத்து 500 இடங்களே உள்ளது, இதில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழகத்திலேயேதருமபுரிமாவட்டத்தில் அதிக அளவிலான மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் பொறியல் கல்லூரியில் வருடத்திற்க்கு 1 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் பொறியல் பட்டம் பெறுகின்றனர்.மேலும் அதிக அளவிலான மாணவ – மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகின்றனர் என்றும் உயர் கல்வி பயில மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவி தொகை திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், மாணவ – மாணவிகள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, பாரதியர் பல்கலைகழகம் தொழில் வழிகாட்டுதல் துறை தலைவர் முனைவர் விமலா, டாடா எலக்ட்ரானிக்ஸ் திட்ட மனித வள மேம்பாட்டு துறை அலுவலர் வெள்ளக்கிரி, பயிற்சி திட்ட உதவி இயக்குநர் முத்தமிழ் செல்வன் மற்றும் தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளி மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

