கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி மற்றும் மொத்த கொள்ளளவு 1666.29 மில்லியன் கன அடி ஆகும். 26.05.2026 இன்றைய நிலவரப்படி அணையின் தற்போதைய கொள்ளளவு 1441.76 மில்லியன் கன அடியாகவும் நீர்மட்டம் 50.00 அடி மற்றும் அணையின் நீர் வரத்து 744 கன அடி ஆகும். அணையின் பாதுகாப்பு கருதி மேற்கொண்டு வரும் நீர் முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியுள்ளதால் சாத்தனூர் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வானப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
அணையின் தற்போதைய கொள்ளளவு 1441.76 மில்லியன் கன அடி (50.00 )
அணையின் நீர்வரத்து 744 கன அடி, அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றும் அளவு 300 கன அடி) அணைக்கு அதிகபடியான தண்ணீர் வரும் பட்சத்தில் படிப்படியாக ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். மேலும் 8 மணிக்குள் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும்.
வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள கிராமங்கள் (8 எண்கள்) பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சௌட்டஹள்ளி, தளிஹள்ளி)
1.கிருஷ்ணகிரி 2.தருமபுரி 3.திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ தடை விதிக்கப்படுகிறது.

