மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

Social Vision
Last updated: 2026/05/24 at 4:41 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் புழல் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டு, சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினிமையமாக்க உத்தரவிட்டார்.
 தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பின்னர், அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி, இன்று (24.05.20226) எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் சிறைத் துறையின் செயல்பாடுகள் குறித்து முதற்கட்டமாக புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேலும், சிறைக்குள் போதைப்பொருள் புழக்கத்தை அறவே ஒழிக்கும் வகையில், அவை ஊடுருவும் வழிகளை தடுப்பது குறித்தும், சிறைக்கைதிகளுக்கு கொண்டுவரப்படும் பழங்கள் போன்ற வகையில் பொருட்களை சிறைக்குள்ளேயே வாங்கி வழங்கும் in-house bazaar அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் சிறைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் :-
சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை அதிகாரியுடன் இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டோம். தமிழ்நாட்டில் மொத்தம் 13 சிறைச்சாலைகள் உள்ளன. அச்சிறைசசாலைகளில் உள்ள தண்டனைக் கைதிகள், விசாரணை கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், சிறைச்சாலையில் உள்ள சமையல் கூடம், மருத்துவ வசதிகள், மருத்துவ உபகரணங்கள், குடிநீர் வசதி ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிறைச்சாலையில் வசதிகள், பார்வையாளர்களுக்கான பார்வையாளர்கள் எளிதில் வந்து செல்லும் வண்ணம் நடைமுறைகளை எளிமையாக்குதல் குறித்தும், கால அளவை தாண்டி சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கு தேவையான சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் வழங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிறை கைதிகளின் மருத்துவ அறிக்கைகளை முழுமையாக நவீனப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ நடவடிக்கைகளை வழங்கிடவும், சிறைச்சாலைகளில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள். கூடுதலாக கண்காணிப்பு கேமரா பொருத்துதல், சிறைச்சாலையில் உள்ள ஜெனரேட்டர் வசதியை மேம்படுத்துதல், சிறைச்சாலை பதிவேடுகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு தேவையான நிதிகளை பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலை பெற்று வருங்காலங்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, காவல் துறை தலைமை இயக்குநர் (சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள்) கே.சங்கர் இ.கா.ப., அவர்கள், காவல் துறை தலைவர் (சிறைகள் தலைமையிடம்) ஆர்.கனகராஜ் உட்பட சிறைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
TAGGED: புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார்
Social Vision May 24, 2026 May 24, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

விளையாட்டு
சாதனையாளர்கள்

கேலோ இந்தியா போட்டிகளில் 8 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று கலைச்செல்வி சாதனை

February 13, 2024
புத்தகம் பேசினால்

தமிழில் எழுதப்பட்ட உலகக் கதைகள் : இரட்டை இயேசு சிறுகதைகள்

May 11, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா

May 19, 2024
தமிழ்நாடு

தமிழைக் கட்டாயப்பாடமாக்க, தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 

July 30, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் 1,51,531 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

December 27, 2024
சாதனையாளர்கள்விளையாட்டு

சர்வதேச போட்டியில்  மாற்றுத்திறனாளி வீரர்கள்  வெற்றி வாகை சூட வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 

November 16, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026
குற்றம்

நல்லம்பள்ளி அருகே தெருநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி 

November 13, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?