சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சிலிண்டர் எரிவாயு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவேண்டும் என ஒன்றிய அரசை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுததியுள்ளது.
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலின் வாக்குபதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறாத நிலையில் வணிக நிறுவனங்களான உணவு விடுதிகள்,தேனீர்கடைகள், பேக்கரிகள், பலகார கடைகள்,சாலையோர தள்ளுவண்டி கடைகள்,பெரிய மாணவ-மாணவியர் விடுதிகள் போன்றவர்கள் பயன்படுத்தும் வணிக சிலிண்டரின் விலையை கடந்த பிப்ரவரியில் ரூ 144/_ ஏப்ரல் 01 ஆம் தேதி ரூ 200/_தற்பொழுது ரூ 993/_ஆக ரூ 1337/_ விலை உயர்வு ஏற்றப்பட்டுள்ளது,
மேலும் 5கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையை உயர்தியுள்ளது, இதனால் நாடு முழுவதும் இந்த விலை உயர்வை மக்கள் மீது உயர்ந்து வாங்கும் சக்தி குறைந்தால் பெரும் பாதிப்படைவார்கள் ஏழை எளிய மக்கள் அதனால் ஏற்றிய விலை உயர்வை கைவிட வேண்டும், மேலும் ஒன்றிய அரசு பெட்ரோல்,டீசல்,வீட்டு உபயோக சிலிண்டர் விலைகளை உயர்த்த உத்தேச உள்ளதையும் கைவிட வேண்டும், என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் கேட்டுக் கொண்டுள்ளார்

