மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

Social Vision
Last updated: 2026/05/02 at 4:44 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

 

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் மற்றும் தபால் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் வாக்கு எண்ணிக்கைகான பணி சம வாய்ப்பு (Randomization) முறையில் ஒதுக்கீடு செய்வதை பொது பார்வையாளர்கள் டாக்டர் ஹீரா லால், வந்தனா வைத்யா, மற்றும் வாக்கு எண்ணிக்கை மைய தேர்தல் பார்வையாளர்கள் சுஷில் குமார் இணைச் செயலாளர் (பீகார் அரசு), தரோ மைஸ் இணைச் செயலாளர் (அருணாச்சலப் பிரதேச அரசு) ஆகியோர் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ்,  முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ்,  தலைமையில் நடைப்பெற்றது.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் தருமபுரி மாவட்டம், செட்டிக்கரையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு மற்றும் தபால் வாக்குகள் எண்ணும் பணியானது 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணிக்காக மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர் மாவட்ட தேர்தல் அலுவலரால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பானது முதற்கட்டமாக (30.04.2026) அன்று நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று கணினி சுழற்சி முறையில் வாக்கு எண்ணிக்கைகான பணி சம வாய்ப்பு (Randomization)முறையில் ஒதுக்கீடு செய்வது மற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நடைப்பெற்றது.

இப்பயிற்சி வகுப்பில், வாக்கு எண்ணும் அலுவலர்கள் எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்பது குறித்தும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி பணிபுரியவும் மாவட்ட தேர்தல் அலுவலரால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதை முன்னிட்டு நடைப்பெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த பயிற்சி வகுப்பில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.கவிதா, மத்திய / மாநில அரசு அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.பாலசுந்தரம், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.அன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

TAGGED: தருமபுரி  வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிக்காக 650 காவலர்கள், மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்
Social Vision May 2, 2026 May 2, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #shortsvideoviral #DMK #dmknews KanimozhiKarunanidhi
#shortsfeed #shortvideo #shorts #shortsviral #socialvisiontv #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shorts #shortsfeed #shortvideo #shortsviral #dmknews #kanimozhikarunanidhi
#shortsfeed #shortvideo #shortsviral #shorts #dmknews #socialvisiontv #KanimozhiKarunanidhi
#shortsfeed #shorts #shortvideo #breakingnews #shortsviral #neet #NEET #socialvisiontv
#shortsfeed #shortvideo #shortsviral #socialvisiontv #shorts
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரியில் புத்த பூர்ணிமா மற்றும் பண்டிதமணி அயோத்திதாசர் பிறந்த நாள் விழா

May 23, 2024
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் 

October 19, 2025
இந்தியா

இந்தியாவின் இளம் எம்.பி. சஞ்சனா ஜாதவ்: குவிந்து வரும் வாழ்த்துக்கள் 

June 5, 2024
தமிழ்நாடு

துப்பாக்கி சுடும் போட்டி பெண்காவலர்களுக்கு சான்றிதழ் பதக்கம் வழங்கப்பட்டது

June 17, 2024
தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை ஆனந்தகுமார், ஐஏஎஸ் ஆய்வு

December 4, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மார்ச்-5 ல். வனத்துறை நடத்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

March 2, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில்  90.14 சதம் விறுவிறுப்பான வாக்குபதிவு

April 23, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?