தருமபுரி மாவட்டத்தில் 90.14 சதம் விறுவிறுப்பான வாக்குபதிவு
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, தருமபுரி, அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, ஆகிய 5 தொகுதிகளை உள்ளடக்கியது. பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் 237476 வாக்காளர்களும், பெனாகரத்தில் 246293 வாக்காளர்களும், தருமபுரியில் 257939 வாக்காளர்களும், உள்ளனர். மேலும் பாப்பிரெட்டிப்பட்டியில் 254,658 வாக்காளர்களும் அரூர் தனி தொகுதியில் 243742 வாக்காளர்கள் என மொத்தம் 1240108 வாக்காளர்கள் 1596 வாக்குச்சாவடிகள் உள்ளன. 150 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டன.
தருமபுரி மாவட்டததில் உள்ள ஏழை குடும்பங்கள் வேலைத் தேடி பெங்களூருக்கும் வெளிமாவட்டஙகளுக்கும் செனறிருந்தவர்கள் ரயிலிலும் பேருந்து களிலும் வந்தடைந்து தனது சொந்த கிராமத்தில் வாக்களித்தனர்.வாக்குபதிவு நாளான ஏப்- 23 அன்று தருமபுரி மாவட்டத்தில் கடைகள் ஓட்டல்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டன. இதனால் பெரும்பாலன கடைகள் மூடப்பட்டிருந்தன. குறிப்பாக பெண்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில்காத்திருநது வாக்களித்தனர். முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள், உடல்நிலை சரியில்லாதவர்கள் என அனைத்து தரப்பினரும் காலையில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்திருந்தனர். குறிப்பாக முதல்வாக்காளரகள் தனது பெற்றோருடன் வந்து ஆர்வமாக வாக்களித்தனர். மாவடத்தில் காலை 9 மணி நிலவரப்படி 17.91 சதவீத வாக்குபதிவும், மதியம் 1 மணி நிலவரப்படி 59.02 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 87.28 சதவீதமும் இறுதியாக பாலக்கோட்டில் 92.57, சதவீதமும் பென்னாகரத்தில் 90.71, சதவீதமும் தருமபுரியில் 89.44, சதவீதமும் பாப்பிரெட்டிப்பட்டியில் 90.36, சதவீதமும் அரூரில் 87.72 சதவீதம் வாக்குபதிவு செய்துள்ளனர்.

