13- ஆவது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றம் மின்வாரியததிற்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்த ஏஐசிசிடியு
சென்னை தமிழ்நாடு மின்வாரிய தலைமை
அலுவலகத்தில் மார்ச் -13 ஆம் தேதியன்று
நடைபெற்ற 13 வது ஊதிய உயர்வு
ஒப்பந்தத்தில் தமிழ்நாடு மின்வாரிய
ஜனநாயகபொது தொழிலாளர்
சங்கம் -AICCTU மாநிலத்தலைவர் சி.முருகன் கலந்துகொண்டு
வாரிய தலைவரிடம் சில முக்கியமான
கோரிக்கைகளை மிகவும் கவனமாகவும்
தெளிவாகவும் முன்வைத்து பேசினார்.
இந்த 13 வது ஊதிய ஊயர்வு ஒப்பந்தம்
நிறைவேறுவதற்கு உறுதுணையாக
இருந்த வாரிய தலைவருக்கு தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர்
சங்கத்தின் சார்பாகமனமார்ந்த
நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .
அதே போல காலியாக உள்ள 60 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப நீங்கள்
விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்று பரிவோடு கேட்டுக்கொண்டோம்.15 ,20 வருடங்களாக தமிழ்நாடு மின்சார
வாரியத்தில்ஒப்பந்ததொழிலாளர்களாகவேஇருந்து ஒரு சில ஒப்பந்த
தொழிலாளர்கள் இன்னும் 5,6
வருடங்களில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அவர்களது வாழ்வின் நலன் கருதி வாரியம் தமிழக அரசிடம் பேசி
அவர்களை நிரந்தரம் செய்வதற்கோ,
அல்லது தினந்தோறும்
ரூபாய் 766 ரூபாய் சம்பளம் மின்வாரியம் மூலமாக பெறுவதற்கோ தகுந்த நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
என்று அன்போடு கேட்டுக் கொண்டோம்.
கணக்கீட்டு பிரிவில் காலியாக உள்ள 6000- ற்கும்மேற்பட்ட கணக்கீட்டாளர்களை
நியமனம் செய்ய தாங்கள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி
கேட்டுக்கொண்டோம்.
அதேபோல தமிழ்நாடுமின்வாரிய
அலுவலகங்களில் பகுதி நேர
பணியாளர்களாக பணி செய்து
கொண்டிருக்க கூடிய அனைத்து பகுதி நேர
பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த
முயற்சி எடுக்க வேண்டும்என
கேட்டுக் கொண்டோம்.
மிகுந்த மன உளைச்சலில்
பிரிவு அலுவலகங்களில் பணிபுரியும்
தொழிலாளர்கள் ஆட்கள்
பற்றாக்குறையால் மன வேதனையில்
துடித்துக் கொண்டிருக்கின்றனர்
ஆகையால் தினந்தோறும் மின்சார விபத்து
ஏற்பட்டு நிரந்தர பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் கேங்மேன்
பணியாளர்கள் தங்கள் விலைமதிப்பற்ற
உயிரை மின் வாரியத்தின்உயர்வுக்காக
தியாகம் செய்கின்றனர்.ஆகையால்
மின்சார வாரியத்தின் நிலைமையை
தமிழக அரசிடம் எடுத்துச் சொல்லிதமிழக மக்களுக்கு தடையின்றி
சீரான மின்சாரம் வழங்க
புதிய ஆட்களை நியமனம் செய்ய
அரசுக்கு பரிந்துரைக்க
வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.கோரிக்கைகளை
கவனமாககேட்டுக்கொண்ட
வாரியத் தலைவர் உடனடியாக
சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து
எங்கள் முன்னிலைலேயே
அழைத்துப் பேசி ஒப்பந்த
தொழிலாளர்கள் பகுதி நேர
பணியாளர்களின் அனைத்து
கோரிக்கைகளையும் உடனடியாக
பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு
அறிவுரை வழங்கினார்.

இன்று நடைபெற்ற ஊதிய உயர்வு
ஒப்பந்தம் வாரிய தலைவரின்
அணுகுமுறை அதிகாரிகளின் அணுகுமுறைஇயக்குனர் பகிர்மானம்
செல்வகுமார் அவர்கள் நடத்திய
பேச்சுவார்த்தையில் மனநிறைவோடு
கையொப்பமிட்டோம். என தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர்
சி .முருகன் தெரிவித்தார்.

