இந்திய மாதர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கம்
சர்வதேச மகளிர் தினம் முன்னிட்டு
இந்திய மாதர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா மற்றும் கருத்தரங்கம் தருமபுரி மின்னலகம் அரங்கில் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு மாதர் சங்க மாவட்ட பொறுப்பாளர் அலமேலு தலைமை வகித்தார்.வத்தல்மலை பார்வதி,யசோதா,ஜெ. காளியம்மாள்,மாதேமங்கலம் பூபதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நார்த்தம்பட்டி ரேகா வரவேற்றார்.

இதில் சேலம் மாவட்ட பள்ளிக் கல்வி தூய்மைப் பணியாளர் சங்க அமைப்பாளர் ஜி .சத்தியபாமா,தருமபுரி மாவட்ட பள்ளி கல்வி நிர்வாகக்குழு உறுப்பினர் ரேணுகா, ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்
சர்வதேச மகளிர் தினத்தினை வாழ்த்தி இலளிகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெ .பிரதாபன்,FITU மாவட்ட பொறுப்பாளர் ஜி. மாதையன்,இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜி .பச்சாகவுண்டர்,தருமபுரி பள்ளி கல்வி தூய்மைப் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கே. இரவிச்சந்திரன், இந்திய பழங்குடி மக்கள் சங்க பொறுப்பாளர் ராஜகோபால், என். பி. ராஜி,எம். குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக சர்வதேச மகளிர் தின பேரணி தருமபுரி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தொடங்கி மின்னலகம் அரங்கைவந்தடைந்தது.இறுதியில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கத்தின் சேர்ந்த இலளிகம் சி. பெருமக்காள் நன்றி கூறினார்.

