வருவாய்த்துறைகூட்டமைப்பின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பணியாளர்- அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை முடிவிற்கு கொண்டு வரவேண்டுமென தமிழ்நாடு முதல்வருக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டக்குழுவேண்டுகோள்விடுத்துள்ளது.
இது குறித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெ.பிரதாபன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :
தமிழ்நாடு அரசின் இருக்கும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கடந்த ஒருவார காலமாக ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி கடந்த ஒரு வார காலமாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் பொது மக்கள் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்க முடியாமலும் விண்ணப்பித்தவர்களுக்கு சேவைகள் கிடைக்காமல் இருந்து வருகின்றனர். அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வேலை நிறுத்தத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமாய் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்வதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

