தருமபுரி புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் என மொத்தம் 80,782 மாணவவர்கள் பயன் :மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.
தருமபுரி மாவட்டத்தில் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் என இரண்டு திட்டங்களிலும் மொத்தம் 80,782 மாணவவர்கள் பயன்பெறறுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ்,தெரிவித்துள்ளதாவது.
தருமபுரி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2022-2023 கல்வி ஆண்டில் முதல்கட்டமாக 5570 மாணவிகளும் இரண்டாவது கட்டதில் 4282 பயனாளிகளும் மொத்தம் 9852 மாணவிகள் பயனடைந்து உள்ளனர், 2023-2024 கல்வி ஆண்டில் மூன்றாம் கட்டமாக 93 கல்லூரிகளில் 13864 மாணவிகளும், 2024-2025 கல்வி ஆண்டில் 93 கல்லூரிகளில் 14285 மாணவிகளும், 2025-2026 கல்வி ஆண்டில் 97 கல்லூரிகளில் 14660 மாணவிகளும் பயனடைந்து உள்ளனர்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 2024-2025 கல்வி ஆண்டில் 72 கல்லூரிகளில் முதல் கட்டமாக 7032 மாணவர்களும் இரண்டாம் கட்டமாக 3965 மாணவர்களும் மொத்தம் 10997 மாணவர்களும், 2025-2026 கல்வி ஆண்டில் 76 கல்லூரிகளில் 11554 மாணவர்களும் பயனடைந்து உள்ளனர் .
எனவே, தருமபுரி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 58,231 மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 22,551 மாணவர்களும் என மொத்தம் 80,782 மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

