சென்னை மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கமல்ஹாசன் எம்பி முன்னிலையில் LEAD ON GANDHI” ஆவணப்படம் திரையில்
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள மகளிர் கிறித்தவக் கல்லூரியில் நடைபெற்ற FESTIVE 2026- GOLDEN JUBILEE நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன் கலந்து கொண்டார், நிகழ்ச்சியில் அவர் சமூகம், அரசியல், பெண்ணுரிமை உள்ளிட்ட மாணவிகளின் கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்தார். கட்சியின் சார்பில் மாணவர் அணி மாநிலச் செயலாளர் ராகேஷ் ராஜசேகரன் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், மாநிலச் செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சினேகன், முரளி அப்பாஸ் ஆகியோருடன் மாணவர் அணி மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் இறுதியாக கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் உருவான “LEAD ON GANDHI” என்ற ஆவணப்படம், மாணவிகளின் முன்னிலையில் திரையிடப்பட்டது.

