தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், அறிவுறுத்தல்.
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், (12.02.2026) நேரில் பார்வையிட்டு. ஆய்வு மேற்கொண்டார்.
இப்புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், உணவகங்கள். பொருட்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை, கழிவறைகள், நேரக் காப்பாளர் அறை. தாய்மார்கள் பாலுட்டும் அறை. பேருந்து நிறுத்தும் இடம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். இப்புதிய பேருந்து நிலையத்தினை சுத்தமாகவும். தூய்மையாகவும் வைத்துகொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
பயணிகள் பேருந்துக்காக காத்திருக்க கூடுதலாக நிழற்கூடம் அமைக்க வேண்டும் எனஅலுவலர்களுக்குஅறிவுறுத்தினார்கள். மேலும், பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். இப்புதிய பேருந்து நிலையத்திலிருந்து. நகர பேருந்து நிலையத்திற்கு பயணிகள் செல்ல ஏதுவாக பேருந்துகளை அதிகபடுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். இந்த ஆய்வின்போது, நகர் நல அலுவலர் இலட்ஷியவர்ணா, துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், சுசீந்திரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

