மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 
தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

Social Vision
Last updated: 2026/02/07 at 5:42 PM
Social Vision
Share
4 Min Read
SHARE
தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 
தருமபுரி நகரின் மையப்பகுதியில் பி.ஆா்.ராஜகோபால் பேருந்து நிலையம் 5.75 ஏக்கர் பரப்பளவில் நகராட்சி சாா்பில் 1980 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரனால் திறந்துவைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து பலமுறை மேம்பாட்டு பணிகள், புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தொடா்ந்து பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கிருந்து ஒசூா், சேலம், கோவை, மதுரை, திருவண்ணாமலை, திருப்பத்தூா், சென்னை, வேலூா், பெங்களூரு, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நகர மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, போதிய வசதியுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கவும், நகரில் வாகனப் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கவும் தருமபுரி புறநகா் பேருந்து நிலையத்தை மாற்றி வேறு இடத்தில் புதிதாக கட்டப்படும் என தருமபுரி நகராட்சி நிா்வாகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது.
பேருந்து நிலையம் மாற்றத்தால் தருமபுரி நகரில் உள்ள பேருந்து நிலையைம் வெறிச்சோடியுள்ளன.
இதைத்தொடா்ந்து தருமபுரியில் கடந்த 2017-இல் நடைபெற்ற எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவில் இப்புதிய பேருந்து நிலையம் அரசு மற்றும் தனியாா் பங்களிப்பு நிதித் திட்டத்தின்கீழ் கட்டப்படும் என அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
தனியார் பங்களிப்புடன் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு வியாபரிகள் பொதுமக்கள் , விவசாயிகள்  மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நகராட்சிக்கு நடத்த வேண்டிய பேருந்து நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது நகராட்சி நிர்வாகமே ஏற்று நடத்த வேண்டும். என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்
. எதிர்ப்பை மீறி நகராட்சி நிர்வாகம் தருமபுரி பென்னாகரம் சாலையில், ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கு ஏதுவாக 10 ஏக்கா் தனியாா் நிலம் நகராட்சி வசம் பத்திரப் பதிவு செய்து ஒப்படைக்கப்பட்டது.
அந்த இடத்தில் ரூ. 39.14 கோடியில் தருமபுரி நகராட்சிக்கு தனியாா் வழங்கிய நிலத்தில் அரசு தனியாா் பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் புதிய புறநகா் பேருந்து நிலைய கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
கட்டுமானப் பணிகள் முடிவுற்ற நிலையில் பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக (வியாழக்கிழமை) திறந்துவைத்தார்.
திறப்பு விழா முடிந்தபின்பு அனைத்து அரசு மற்றும் தனியாா் புறநகா் பேருந்துகளும் புதிய  பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையம் திறப்பதற்கு ஒருநாள் முன்புதான் மாவட்ட நிர்வாகம் திடீரென அறிவிப்பு வெளியிட்டது. இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். புதிய பேருந்து நிலையம் திறந்த அன்றே பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
புதிய பேருந்து நிலையம் திறப்பது மற்றும் நடைமுறை குறித்து பேருந்துநிலையம் திறப்பதற்கு முன்தினம் மாலை மாவட்ட நிர்வாகம் ஊடகத்தின் வாயிலாக செய்தி வெளியிட்டது.
புதிய பேருந்து நிலையம் திறப்பால் நகர பேருந்து உள்ளிட்ட அனைத்தும் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையம் சென்றுவிட்டதாகவுகம் அதனால் தருமபுரி நகரத்திற்குள் வருவதற்கு உரிய பேருந்துகள் இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் பழைய பேருந்து நிலையத்திற்கும் புதிய பேருந்து நிலையத்திற்க்குமான தொலைவு சுமார் 5 கிலோ மீட்டர் ஆகும். தருமபுரி நகர போருந்துநிலையத்திற்குள் பேருந்து வராததால் பொதுமக்கள் மாணவர்கள் அரசு ஊழியர்கள் என பேருந்துகளை தேடி சிரமப்பட்டனர். வெளியிரிலிருந்து தருமபுரி புதிய பேருந்து நிலையத்திற்குள் இறக்கி விடப்பட்டவர்களுக்கு தருமபுரி நகரத்திற்குள் வர பேருந்து இல்லாமல் தத்தளித்தனர்.
மேலும் தருமபுரி நகரத்திற்குள் உள்ள பழைய பேருந்து நிலையத்தினுள் சுமார் நூறுக்கும் மேற்பட்ட நகராட்சி கடைகள், சாலையேர பழக்கடை வியாபரிகள் என 250 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. பேருந்து நிலையம் மாற்றத்தால் வருமான மின்றி தவித்து வருகின்றனர்.
புதிய பேருந்து நிலையத்தில் பெரும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கடை எடுத்து நடத்த முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இது குறித்து பழைய பேருந்து நிலைய வியபாரிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் பி. என். வெங்கட்டேஷ் , பாமக சிறுபான்மை நல மாவட்ட தலைவர் கே.சலீம்,வியபாரிகள் சங்க தலைவர் பாபு ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி. டில்லிபாபு, மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன் மாவட்டக்குழு உறுப்பினர் டி. எஸ். ராமச்சந்திரன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நகர செயலாளர் எஸ். நிர்மலாராணி ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சந்தித்து தங்களின் கோரிக்கைகள் எடுத்துரைத்தனர். பழைய பேருந்துநிலையவியாபரிகளின்வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில்  பழைய பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் ஊர்களான திருப்பத்தூர், அரூர் பாப்பிரெட்டிபட்டி,சேலம்,திருவண்ணாமலை ஆகிய ஊர்களின் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தி இயக்க  வேண்டும். என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
TAGGED: தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல்.
Social Vision February 7, 2026 February 7, 2026
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortfeed #shortsviral #vcknews #nanguneri
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #breakingnews #socialvisiontv #dhaapuri_Busstand
#shortvideo #shors #shortsfeed
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #mkstalin #dmk
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #breakingnews #elephant
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

பென்னாகரம் அரசு கல்லூரியில் ஜூலை – 8 ல் மாணவர்சேர்க்கை கலந்தாய்வு 

July 6, 2024
குழந்தைகள் உலகம்

அரசு பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதிபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

February 5, 2026
தூய்மை பணியாளர்கள்
அரசு நல திட்டம்

தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.74,250/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்

March 8, 2024
இந்தியாசினிமா

இப்படி ஒரு புகைப்படமாக! நயன்தாரா லேட்டஸ்ட் போட்டோசூட் சூட் 

August 4, 2024
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இதில் 14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியா

14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு – மந்திரிசபை ஒப்புதல்

June 20, 2024
இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

யுஜிசி நெட் தேர்வு ரத்து: மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு!

June 19, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

எரிமலை அருகே பெண் யானை உயிரிழப்பு

March 2, 2026
தமிழ்நாடு

தருமபுரியில் தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா 

March 2, 2026
தமிழ்நாடு

ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்கா இஸ்ரேல்  பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமுமுக அமைதி ஆர்ப்பாட்டம்  

March 1, 2026
தமிழ்நாடு

அன்னசாகரம் பகுதியில் சனத்குமார் நதியை தூர்வாரி தூய்மை படுத்தும்  பணி துவக்கம்.

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?