அரசு பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதிபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் போதிய அளவில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் நல்லம்பள்ளி ஒன்றியம், உம்மியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இன்று (05.02.2026) WATER BELL அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதி சந்திரா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

