தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு
பிப்ரவரி 12 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை விளக்கி சிஐடியு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது,
சங்கத்தின் மண்டல தலைவர் எஸ். சண்முகம் தலைமை வகித்தார். சம்மேளன துணை பொதுச்செயலாளர் வி. தயானந்தம் சிறப்புரையாற்றினார்.
மண்டல பொதுச்செயலாளர் சி. ரகுதிபதி துணைத்தலைவர் சி. முரளி, பொருளாளர் என். மயில்சாமி, மாவட்ட நிர்வாகிகள் முத்துலிங்கம், வெங்கடாசலபதி ஆகியோர் பேசினர்.

8 மணிநேர வேலையை 12மணிநேரமாக மாற்றம் நடவடிக்கை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டத்தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்-12 அன்று நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் பங்கேற்று வெற்றிபெற செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

