பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57-ஆவது நினைவு நாளை ஒட்டி, சென்னை வாலாஜா சாலையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த அமைதிப் பேரணியில் கலந்துகொண்டு நடந்து வருகிறார். வாலாஜா சாலையில் தொடங்கிய இந்த பேரணி, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடம் ,அண்ணா சதுக்கம் வரை சென்றது.
இதைத்தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.முதலமைச்சருடன் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவின் முக்கியத் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இந்த அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். இதனால் வாலாஜா சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

