தருமபுரியில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அவரது உரவசிலைக்கு திமுகவினர் மாலை அணிவிப்பு
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் ஆ மணி எம்பி தலைமையில், தருமபுரி ராஜகோபால் பூங்கா அருகில் இருந்து அமைதிப் பேரணியாக சென்று, நான்கு ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு சென்றனர்.
பின்னர் பேரறிஞர் அண்ணா சிலைக்கு, திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் ஆ .மணி, எம்பி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தடங்கம் பெ .சுப்ரமணி, மற்றும் வணிகர் அணி மாநில துணை செயலாளர் அணி பி. தர்மசெல்வன்,மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், ரேணுகாதேவி,நகர செயலாளர்கள் நாட்டான்மாது,கெளதம் ,உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

