முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு
தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளதை தொடர்ந்து, முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், செவ்வாய்க்கிழமை அனுறு நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி நகராட்சிக்கு அருகிலுள்ள சோகத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட ஏ.ரெட்டிஅள்ளி பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் 39.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய பேருந்து நிலையத்தில் தற்போது தரைதளம் மற்றும் முதல் தளத்தில் கடைகள், உணவகங்கள், ஏடிஎம் மையம், பொருட்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை, கழிவறைகள், நேரக் காப்பாளர் அறை, தாய்மார்கள் பாலுட்டும் அறை, மேற்கூரை அமைக்கும் பணிகள், பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் ஓய்வு அறைகள், 55 எண்ணிக்கையிலான பேருந்து நிறுத்தும் இடம், நடைபாதை, பயணிகள் அமரும் இடத்தில் டைல்ஸ் பதிக்கும் பணிகள், பிரதான சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் போன்ற பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சி.க.ஜெயதேவ்ராஜ், நகராட்சி ஆணையாளர் சேகர், தருமபுரி நகர மன்ற தலைவர், போக்குவரத்து மேலாளர் க.செல்வம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

