18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ள விண்ணப்பிக்கவும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்
தருமபுரி மாவட்ட வாக்காளர் பெருமக்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அன்பான வேண்டுகோள்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் 5 சட்ட மன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள், கடந்த 04.11.2025-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 27.12.2025-ம் தேதியன்று பதிவு செய்யப்பட்டிருந்த மொத்தம் 12,85,432 வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்ட படிவங்கள் சரிபார்க்கப்பட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் பதிவு செய்யபட்டு 100 சதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் திருத்தப்பட்ட கால அட்டவணைப்படி 16.12.2025-ம் தேதியன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
எனவே தற்போது 18 ஆண்டுகள் வயது நிறைவடைந்த நபர்கள் மற்றும் 01.10.2026-ம் தேதிக்குள் 18 ஆண்டுகள் நிறைவடையுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திட புதிய வாக்காளர் பதிவுக்கான படிவம்-6 மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவற்றை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆகியோர் வசம் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், இதுவரை கணக்கெடுப்பு படிவங்கள் அளிக்காத நபர்கள் மற்றும் வாக்காளர்பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள நபர்களும் வாக்காளர் பதிவுக்கான படிவம்-6 மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவற்றை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதன்பொருட்டு ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு, உதவி மையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மையங்களில் படிவங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் (BLO) படிவங்களை வைத்துள்ளனர். இப்படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும், இணைய வழியிலும் https://voters.eci.gov.in/ என்ற இணைய தளத்தில் ”New Voters Registration” என்ற இணைய பக்கம் மூலமாகவும் தங்களுடைய விண்ணப்பங்களை அளிக்கலாம்.
மேலும், உதவி மையங்களை கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் – 1950
வாட்ஸ்அப் – தேர்தல் உதவி எண் – 9444123456
வாக்காளர் பதிவு அலுவலர், தருமபுரி – 04342-260927
வாக்காளர் பதிவு அலுவலர், பாலக்கோடு – 04348-222045
வாக்காளர் பதிவு அலுவலர், பென்னாகரம் – 04342-255636
வாக்காளர் பதிவு அலுவலர், பாப்பிரெட்டிப்பட்டி – 04346-246544
வாக்காளர் பதிவு அலுவலர், அரூர் – 04346-296565
எனவே வலுவான ஜனநாயக கட்டமைப்பிற்கும், வாக்காளர் பட்டியல் செம்மையாக தயாரிக்கவும், வாக்களிப்பது நமது கடமை, அதற்காக வாக்காளராக பதிவு செய்து கொள்வோம்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

