மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
அரசு நல திட்டம்

கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

Social Vision
Last updated: 2025/12/14 at 1:29 PM
Social Vision
Share
6 Min Read
SHARE
கலைஞர் மகளின் உரிமை தொகை 1கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14.12.2025)தருமபுரி,பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற, முன்னாள் அமைச்சர் முனைவர் பெ.பழனியப்பன் –  ரோஜா தம்பதியரின் மகன் எழில்மறவன் மற்றும் வெ.சரவணன் –  சாந்தி தம்பதியரின் மகள் கிருத்திகா ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து பேசியதாவது :
நம்முடைய பாசத்திற்குரிய தருமபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பழனியப்பன் அவர்களின் மகன் எழில்மறவன் அவர்களுக்கும், கிருத்திகா அவர்களுக்கும் நடக்கும் இந்த திருமண விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மண விழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய சிறப்பான வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகள், புதிய புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகள், அதுமட்டுமல்லாமல் கட்சி நிகழ்ச்சிகள், ஆய்வுக்கூட்டங்கள், கழக குடும்பங்களில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் என இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள், ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு இடையில் உங்களை எல்லாம் பார்க்கும் நேரத்தில், அதுவும் பழனியப்பன் அவர்களின் இல்லத்தின் மணவிழா நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் பார்க்கும் நேரத்தில் எனக்கே ஒரு ரிலாக்ஸ் ஏற்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம், நம்முடைய மகளிருக்கான திராவிட மாடல் அரசின் சார்பில் தீட்டப்படும் திட்டங்கள் மூலமாக கிடைத்துக்கொண்டிருக்கும் சாதனைகளை அடிப்படையாக வைத்து அந்த சகோதரிகளின் வெற்றிக்கான அடையாளமாக, அதை பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’என்ற தலைப்பில் ஒரு மாபெரும் நிகழ்ச்சியை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தினோம். நீங்களும் அதை தொலைக்காட்சிகளில் பாத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
அதேபோல், நம்முடைய மகளிருக்கு கலைஞர் பெயரால் வழங்கக்கூடிய மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் மாதாமாதம் நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு வழங்கிக்கொண்டிருக்கின்றோம். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்றைய முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலமாக கூடுதலாக 17 இலட்சம் சகோதரிகளுக்கு அந்த ஆயிரம் ரூபாயை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்கிறேன். ஏற்கெனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1 கோடியே 13 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுவந்தது. ஆனால், நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலமாக மேலும் கூடுதலாக 17 இலட்சம் சகோதரிகளுக்கு அதாவது 1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கக்கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறோம்.
இன்னும் கூட சில தகுதி உள்ளவர்கள் விடுபட்டிருந்தால், அவர்கள் உடனடியாக கோரிக்கை வைத்தால் அவர்களுக்கும்  நிச்சயமாக வழங்கப்படும் என்ற நம்பிக்கையையும், உறுதியையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதுமட்டுமல்ல, அது இன்னும் உயரும் என்று கூட சொல்லியிருக்கிறேன்.
அப்படிப்பட்ட மகிழ்ச்சியான நாளில்தான், மற்றொரு பெருமிதமான செய்தியும் வெளியானது. அதை தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். அதாவது, ஒரு நாட்டின், ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான முக்கியமான அறிகுறியாக இருக்கும் ஜிடிபி வளர்ச்சியில் இன்றைக்கு தமிழ்நாடுதான் நம்பர் ஒன் மாநிலமாக உருவாகியிருக்கிறது. இது நாங்கள் வெளியிட்ட அறிக்கை அல்ல. ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கை!
நீங்கள் நினைத்துப் பாருங்கள். எவ்வளவோ தடங்கல்கள். எவ்வளவோ சோதனைகள். அந்த சோதனைகளையெல்லாம் தாண்டி இன்றைக்கு சாதனை படைத்திருக்கும் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய திராவிட மாடல் ஆட்சி.
மற்றொரு பக்கம், தேர்தல் வேலைகள். அதில் குறிப்பாக SIR என்ற ஒரு நடைமுறையை கொண்டுவந்து அந்த பணியும் நடைபெற்றுவருகிறது.
இங்கு எழுச்சி தமிழர் நம்முடைய திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டு சொன்னார். இன்றைக்கு எஸ் ஐ ஆர் பணிகளை திராவிட முன்னேற்றக் கழகம் எந்தளவுக்கு அதன் கட்டமைப்பு முறையாக  அமைத்திருக்கும் காரணத்தால் அந்த பணிகளை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார். உண்மைதான். அந்த எஸ்ஐஆர் பணிகளை இன்றைக்கு பம்பரம் போல் நம்முடைய தோழர்கள் செய்துகொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து எல்லோரும் அதை குறிப்பிட்டு சொல்கிறார்கள். பெருமைப்படுகிறார்கள்.  எதற்கு என்றால்,  நம்முடைய வாக்குரிமையை நாம் காப்பாற்றியாக வேண்டும். விழிப்போடு நாம் வேலைகளை பார்த்திருக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் பாதி வேலைகள்தான் முடிவுற்றிருக்கிறது. இன்னும் பாதி வேலைகள் இருக்கிறது.
தேர்தல் நடந்து, வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவு அறிவிக்கும் வரை நமக்கு வேலை இருக்கிறது. நீங்கள் மறந்துவிடக் கூடாது. இரண்டு வாரத்தில் டிசம்பர் முடிந்து ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு வரப்போகிறது. அதற்குபிறகு, தேர்தலுக்கு சிறிது நாட்கள்தான் இருக்கிறது. அதனால் நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது நம்முடைய சாதனைகள், திட்டங்கள், நாம் ஆற்றக்கூடிய பணிகள் மக்களுக்கு சென்றடைந்திருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை. முழுவதுமாக அதை நாம் கொண்டு சேர்க்க வேண்டும். ஆனால், என்னதான் சென்றடைந்திருந்தாலும் இங்கு நம்முடைய  தொல்.திருமாவளவன் அவர்கள் குறிப்பிட்டதைபோல், இன்றைக்கு எதிரிகள் நம்மை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்கள் எவ்வளவுதான் அந்த பணியில் ஈடுபட்டாலும்  நாம் ஏமாந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் அவர் குறிப்பிட்டுச் சொன்னார். உண்மைதான்.
நம்முடைய சாதனைகளை, திட்டங்களை வீடு வீடாக சென்று மக்களிடத்தில் எடுத்து செல்லக்கூடிய அந்த பணிகளில் ஈடுபட்டு அவையெல்லாம் வாக்குகளாக மாற்ற வேண்டும், ஏழாவது முறையாக திராவிடமாடல் ஆட்சி உருவாகியிருக்கிறது என்ற பெருமை நமக்கு வந்தாக வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும். அதில் உங்கள் எல்லோருடைய பங்கும் அதில் நிச்சயமாக இருக்க வேண்டும்.
நம்முடைய பழனியப்பன் அவர்களைப் பற்றி நான் சொல்லவேண்டும் என்று சொன்னால், அவர் முன்னாள் அமைச்சராக இருந்தவர். உங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர்.  அவரைப்பற்றி நான் அதிகமாக உங்களிடத்தில் எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காரணம், அவர் ஆற்றக்கூடிய பணிகளையெல்லாம் நீங்கள் அறிந்தவர்கள். என்னைப்பொறுத்தவரை, அவர் அதிமுக-வில் இருந்தபோது அமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றியபோது நாங்களெல்லாம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்போம். அவர் ஆளுங்கட்சி வரிசையில் அமைச்சராக சட்டமன்றத்தில் அமர்ந்திருப்பார். அப்படி அமர்ந்திருக்கும்போது ஒவ்வொரு அமைச்சருக்கும் துறையின் சார்பில் மானியக்கோரிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த அவையில் அதுகுறித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதில் சொல்லும் வகையில் ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும். ஆனால், அதிமுக-வைச் சார்ந்த எந்த அமைச்சர்களும் பொறுப்பாக இவரைப்போல் பதில் சொன்னது இல்லை.
அதுமட்டுமல்ல. மற்ற அமைச்சர்களெல்லாம் பதில் சொல்லும்போது நாங்களெல்லாம் பாதியில் எழுந்து வெளியே சென்றுவிடுவோம். ஏனென்றால், அந்த அளவிற்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவார்கள்.  யேசுவார்கள். விமர்சனம் செய்வார்கள். விமர்சனம் செய்யட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. குறைகளை சொல்லட்டும். தவறில்லை. தனிப்பட்ட முறையில் தாக்கி பேச ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், பழனியப்பன் அவர்கள் பதில் சொல்கிறார் என்றால், நாங்கள் அத்தனை பேரும் சட்டமன்றத்தில் உட்கார்ந்திருப்போம்.  நானே, நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்களிடம் சொல்வேன்.  .பழனியப்பன் அவர்கள் பதில் சொல்லப்போகிறார்.  நாம் யாரும் வெளியே செல்ல வேண்டாம். உட்காருவோம் என்று நான் சொல்வேன். அந்தளவுக்கு கண்ணியத்தோடு ஜனநாயக மாண்பை பாதுகாத்தவர் நம்முடைய  பழனியப்பன் என்று சொன்னால், அது நிச்சயம் மிகையாகாது. அதனால்தான், அவர் கழகத்தில் வந்து சேந்தவுடனே அவரை வரவேற்றபோது நான் சொன்னேன். உங்களிடத்தில் எனக்கு பிடித்தது, சட்டமன்றத்தில் யாரையும் விமர்சனம் செய்யாமல் கடமையோடு நீங்கள்  அந்த  பணியை நிறைவேற்றினீர்கள். அதுதான் மிகவும் பிடிக்கும் என்று வெளிப்படையாக சொன்னேன். அதைதான், அவர் கட்சியில் சேர்ந்ததற்குப் பிறகு கழக தோழர்களிடத்தில், பொதுமக்களிடத்தில், கட்சி நிருவாகிகளிடத்தில் இன்றைக்கும் அந்த முறையை கடைபிடித்துவருவதை பார்க்கும்போது உள்ளபடியே நான் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய இல்லத்திருமணத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு நான் பெருமைப்படுகிறேன்.
இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் எல்லா வளங்களையும் பெற்று சிறப்போடு வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் சொன்னதுபோல், வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்குத் தொண்டர்களாக இருந்து வாழுங்கள்! மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் வாழ்க. வாழ்க.. வாழ்க… இவ்வாறு பேசினார்.
TAGGED: கலைஞர் மகளின் உரிமை தொகை 1கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
Social Vision December 14, 2025 December 14, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

ராமலான்நோன்பை முன்னிட்டு 2500 நபர்களுக்கு பொருட்கள் அடங்கிய தொகுப்பை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

March 4, 2025
தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி  பெங்களூர் ஐடி கம்பெனி மேலாளர் உயிரிழப்பு 

August 31, 2025
அரசியல்

மநீம தலைவர் கமல்ஹாசன் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திப்பு 

February 13, 2026
சினிமா

சென்னை சங்கமம்’ ஒத்திகை நிகழ்ச்சி’! நாட்டுப்புற கலைஞர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி கருணாநிதி எம்.பி

January 7, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை

June 29, 2024
சேரன்மாதேவி
புத்தகம் பேசினால்

சேரன்மாதேவி குருகுல போராட்ட வரலாற்று நூல் : பழ.அதியமான்

April 18, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

June 15, 2026
அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?