நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் காலவரையற்ற போராட்டத்தால் தருமபுரியில் பூட்டியிருக்கும் அலுவலகம்.
18- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நல அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தருமபுரி மாவட்டத்தில் துவங்கியது இதனால் தருமபுரி உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் பூட்டி இருந்தன.
நிலம் சார்ந்த அனைத்து பராமரிப்பு பணிகளையும் கருத்தில் கொண்டு, இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதலில் உள்ள மனித சக்திக்கு மீறிய பணி குறியீட்டினை குறைக்க வேண்டும்.நிலஅளவர்களாக ஒருமுறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீள தரம் உயர்த்தி வழங்க வேண்டும். 2025 ஆம் ஆண்டு பதவி உயர்வுக்காக தகுதி பெற்றும் பணியிடம் இல்லாததால் பதவி உயர்வு பெற முடியாமல் உள்ள அனைவரையும் 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பதவி உயர்வு தேர்வுப் பட்டியலில் இணைத்து பதவி உயர்வு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நில அளவர் பணிக்கான தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளதால் நில அளவர்கள் காலிப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. பட்டா மாறுதல் உள்ளிட்ட நில அளவைப்பணிகளை கருத்தில் கொண்டு உடனடியாக நிலஅளவர் பணியிடங்களை நிரப்பிடவேண்டும்.
துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும்.
நிலஅளவைத் துறையானது முற்றிலும் வருவாய்த்துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்பப் பிரிவு என்பதால் நிலம் கேட்புத்துறை மற்றும் மக்களின் நேரடி தேவைகளுக்காக செயல்படும் நிலம் சார்ந்த அனைத்து பணிகளையும் மேற் கொள்வதால் தனியார் முறையின் கீழ் ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவர்களை நியமிப்பதை முற்றிலும் கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்தவேண்டும் .புறஆதார, ஒப்பந்த முறையில் புல உதவியாளர்கள் நியமனத்தை கைவிட்டு புல உதவியாளர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும்.உங்களுடன் ஸ்டாலின் திட்டபணிகளுக்கு உரிய காலஅவகாசம் வழங்க வேண்டும்.
உள்ளிட்ட 18- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திவலியுறுத்தி தமிழ்நாடு நில அளவைஅலுவலர்கள்ஒன்றிப்பின் சார்பில் காலவரையற்ற போராட்டம் தருமபுரி மாவட்டத்தில் நவ-18 அன்று துவங்கியது.
தருமபுரி மாவட்டத்தில் 7 வட்டங்களிலும் நில அளவை மேலாண்மை மையம் செயல்படுகிறது. இந்த அலுவலகங்களில் ஆய்வாளர், துணை ஆய்வாளர், வட்ட சார் ஆய்வாளர், சார் ஆய்வாளர், குரு வட்ட அளவர் , நில அளவர் உள்ளிட்ட பணியிடங்களில் 105 நபர்கள் பணியாற்றுகின்றனர். காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருவதாலும் மொத்த பணியாளர்களும் முழுமையாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால், தருமபுரியில் செயல்படும் நில அளவை மேலாண்மை மையம் பூட்டியுள்ளது.இதேபோன்று மற்று வட்டங்களில் அலுவலகம் பூட்டியும் , பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிசோடியுள்ளன.

