மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  கடிதம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > இந்தியா > இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  கடிதம்
இந்தியா

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  கடிதம்

Social Vision
Last updated: 2025/11/10 at 9:47 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  கடிதம்
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் நேற்று (09.11.2025) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்குத் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (10.11.2025) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், 09.11.2025 அன்று இரவு, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், அவர்களது இயந்திரப் படகினையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதை தெரிவித்து  ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்திய மீனவர்களும் அவர்களது மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஆழ்ந்த கவலைக்குரியதாக உள்ளதென குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், 2024-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பல மீனவர்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழ்நாட்டைச்சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீன்பிடித் தொழிலை முதன்மை வாழ்வாதாரமாக நம்பியுள்ள கடலோர சமூகங்களை ஆழமாகப் பாதித்துள்ளதாகவும், அவர்களின் குடும்பங்களுக்குக் கடுமையான துன்பங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் உயிர்ப்பித்திடவும், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீடித்தத் தீர்வை அடைந்திட ஒருங்கிணைந்த முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர்  தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
TAGGED: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  கடிதம்
Social Vision November 10, 2025 November 10, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

நில அளவையரை, தாக்கிய ரவுடியை கைதுசெய்ய கோரி ஆர்ப்பாட்டம்.

March 4, 2024
மாவட்டங்கள்

பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026
தமிழ்நாடு

நெல்லை வனப்பகுதியில் சீறிப்பாய்ந்த சிறுத்தை 

May 23, 2024
மாவட்டங்கள்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம்

September 1, 2025
இந்தியாசுற்றுலா

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு

November 14, 2024
மாவட்டங்கள்

இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணி 

March 21, 2025

மேலும் படிங்க

இந்தியாசினிமா

வழக்கறிஞராக பணியாற்றிய மம்மூட்டி திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆனது எப்படி !

September 7, 2026
இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

ஆசிரியர் தினம்: அன்று ‘குரு’… இன்று வழிகாட்டி – காலம் மாறினாலும் மாறாத ஆசிரியரின் பணி!

September 4, 2026
ஆன்மிகம்இந்தியா

கிருஷ்ணஜெயந்தி: உலகெங்கும் பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாள்

September 3, 2026
இந்தியா

சகோதர பாசத்தின் புனிதப் பிணைப்பு: ஆகஸ்ட் 28-ல் ரக்ஷா பந்தன்

August 27, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?