புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய எட்டு வயது பள்ளி மாணவி
மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். குறிப்பாக புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கும், மக்களுக்கும் தட்டணுக்கள் தானமும் இரத்த தானமும் அவசர தேவையாக தமிழக முழுவதும் வழங்கி வருகின்றனர். புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு தலைமுடி செய்ய கூந்தல் தானம் விழிப்புணர்வை தருமபுரி மாவட்டத்தில் ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தருமபுரி செந்தில் நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி மைதிலி தம்பதியினரின் எட்டு வயது மகள் பிரணித்தா அவர்கள் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கினார், இவர் தருமபுரி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள அமலா நர்சரி பள்ளியில் எட்டாம் வகுப்புபடித்துவருகிறார்.அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மை தருமபுரி அமைப்பின் சார்பாக நன்றி தெரிவித்து பாராட்டினர்.

அதே போன்று தருமபுரி அன்னசாகரம் பகுதியை சேர்ந்த குடும்ப தலைவி கோகிலா ஸ்ரீதர் அவர்கள் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கினார்.இவர்களுக்கும் நன்றி தெரிவித்து பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்வில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் முனைவர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் செந்தில், சண்முகம்,தன்னார்வலர்கள் கணேஷ், குணசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

