தருமபுரி மாவட்டத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 104 முகாம்கள் மூலம் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளதாக
தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தகவல். தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ்,தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட, நோய்கள் வரும்முன் அதனைத் தடுக்கும்பொருட்டு ஏழை, எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச் சேவையை அளிக்கும் “கலைஞரின் வரும்முன் காப்போம்” திட்டத்தின் கீழ், 2021-2022-ஆம் ஆண்டில் 24 முகாம்களின் மூலம் 11,642 நபர்களும், 2022-2023-ஆம் ஆண்டில் 24 முகாம்கள் மூலம் 25,614 நபர்களும், 2023-2024-ஆம் ஆண்டில் 24 முகாம்கள் மூலம் 26,583 நபர்களும், 2024-2025-ஆம் (மார்ச் 10, 2025 வரை) ஆண்டில் 32 முகாம்கள் மூலம் 29,540 நபர்கள் என மொத்தம் தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 104 முகாம்கள் மூலம் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

