மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த SIR:  கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த SIR:  கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
கல்வி & வேலைவாய்ப்பு

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த SIR:  கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

Social Vision
Last updated: 2025/11/07 at 12:56 PM
Social Vision
Share
3 Min Read
SHARE

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த SIR:  கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியில், மாவட்ட கனிமவள நிதியின் மூலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று (07/11/2025) நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரையுமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகிவற்றை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி; வரும் நவம்பர் 11ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் SIR திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது என்ற கேள்விக்கு, SIRயை தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர அவசரமாக அமுல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. உண்மையாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நினைத்திருந்தால், போதிய அவகாசம் கொடுத்து SIRயை சரியாக அமல்படுத்தியிருக்க முடியும். ஆனால் பீஹாரில் நாம் தெளிவாகக் பார்த்தோம். பலரின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலை மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் நடந்துள்ளது,

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், மக்களின் வாக்குரிமை எந்த அளவிற்கு பறிக்கப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார். நம்முடைய முதலமைச்சர் அதற்கு முழு ஆதரவையும் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் பீகாருக்கு சென்று அங்கே நடக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு முழு ஆதரவையும் அளித்து இருக்கிறார்.

இதையும் படிங்க

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்
தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு நவ-16 நடக்கிறது:தேர்வர்கள் மொபைல் எடுத்துவர அனுமதி இல்லை ஆட்சியர் ரெ. சதீஷ்
சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த SIR. அதுமட்டுமில்லாமல், தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி பல பிரச்சனைகளை உருவாக்கி, வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய ஒரு சூழல் உருவாகி கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எதிர்த்துதான் திராவிட முன்னேற்றக் கழகமும், கூட்டணி கட்சிகளும் இணைந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம்..

தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி; ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவாக இருந்தாலும், அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களை நாம் கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும். இந்த சமூகம் முதலில் சில விஷயங்களில் பெண்மீது பழிசுமத்தும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்து இருக்கிறார்.

அவர்களுக்கு மிக விரைவில், அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று முழு முயற்சியோடு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கண்டனம் தெரிவிக்க முடியும்; ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கு என்ன கண்டனம் தெரிவிக்க முடியும்.

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியை பற்றிய கேள்விக்கு; “‘உடன்பிறப்பே வா’ சந்திப்பின் போது நானும் உடன் இருந்தேன். வெற்றி பெறவில்லை என்றால் யாருடைய பதவியும் பறிக்கப்படும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற அறிவுரையை ஒரு கட்சித் தலைவர் வழங்குவது என்பது நிச்சயமாக தேவையான ஒன்று. வெற்றி பெற வேண்டும், அதற்காக அனைவரும் ஒருமித்து பாடுபட வேண்டும் என்று முதலமைச்சர் அனைவரிடமும் சொல்லி உள்ளார் என்று பதிலளித்தார்.

இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

TAGGED: இந்த SIR:  கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு, ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான்
Social Vision November 7, 2025 November 7, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

நூறுநாள் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

April 1, 2025
மாவட்டங்கள்

பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற கோரி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம்

June 25, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத் துறை வேலையில்  வாய்ப்பு: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

February 18, 2024
அரசு நல திட்டம்

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் விண்ணப்பிக்கலாம்

March 13, 2024
parliament
இந்தியா

நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) -க்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்இவ்வளவா!

June 7, 2024
இந்தியா

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

February 26, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு நவ-16 நடக்கிறது:தேர்வர்கள் மொபைல் எடுத்துவர அனுமதி இல்லை ஆட்சியர் ரெ. சதீஷ்

November 14, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.

November 7, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

2025-2026-ம் ஆண்டு எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் 

November 6, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?