மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரியில் நவம்பர் புரட்சி தினவிழா
நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவதும் கொடியேற்றுவிழா கருத்தரங்கம் நடைபெற்றது.
தருமபுரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு நவம்பர் புரட்சிதின கொடியேற்று விழா நடைபெற்றது மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன் புரட்சியாளர் லெனின் உருவம் படத்திற்கு மாலை அணிவித்து கொடியேற்றி வைத்தார். பின்னர் கருத்தரங்கம் நடைபெற்றது. தருமபுரி ஒன்றிய செயலாளர் கே. கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மல்லிகா, தி. வ. தனுசன், நகரசெயலாளர் ஆர். ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. எஸ். ராமச்சந்திரன்,கே. என். மல்லையன், கே. பூபதி, ஏ. ஜெயா, ஆகியோர்பங்கேற்று பேசினர்.
அரூர் கட்சி அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தினம் கொண்டாடப்பட்டது ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ் .கே.கோவிந்தன் தலைமை வைத்தார். ஒன்றிய செயலாளர் பி. குமார் கொடியேற்றினார் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயகாந்தன், சி, பழனி மற்றும் வி. மாது, முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி கட்சி அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தின நிகழ்ச்சி மூத்த தோழர் டி. சேகர் தலைமையில் நடைபெற்றது. செங்கொடியை மூத்த தோழர் எஸ். தீர்த்தகிரி ஏற்றி வைத்தார்பின்னர் லெனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தப்பட்டது.
பாப்பாரப்பட்டி பகுதி குழு அ.பாப்பாரப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை துவக்க விழா மற்றும் நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா நடைபெற்றது.
கொடியேற்று விழாவுக்கு சி.முனுசாமி தலைமை வகித்தார். கிளை செயலாளர் டி.சஞ்சீவன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் பெருமாள் கட்சி கொடியேற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன் நவம்பர் புரட்சி தினத்தை வாழ்த்திப்பேசினார். பகுதி குழு செயலாளர் ஆர்.சக்திவேல், பகுதி குழு உறுப்பினர்கள் மு.சிலம்பரசன், கே.லோகநாதன், கிளை செயலாளர்கள் எம்.மணிகண்டன் கட்சி உறுப்பினர்கள் சிவகுமார், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு வட்ட செயலாளர் பி. மார்க்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முத்து கொடியேற்றிவைத்தார். வட்டக்குழு உறுப்பினர்கள் ஜி. நக்கீரன், கோவிந்தசாமி, முருகன், பாண்டியம்மாள், சதீஷ், மாதேசன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
நல்லம்பள்ளியில் நடைபெற்ற புருட்சிதினவிழாவிற்கு ஒன்றிய செயலாளர் எஸ். எஸ். சின்ன ராஜ் தலைமை வகித்தார். லெனின் உருவம் படத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ. அருச்சுனன்,மாவட்டக் குழு உறுப்பினர் கே. எல்லப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் காளி, மற்றும் பூங்கொடி, ஆகியோர் மாலை வைத்து செவ் வணக்கம் செலுத்தினர்.

