கபடி குழுவினருக்கு கபடி விளையாட்டு தள மேட்களை வழங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், விளாத்திகுளம், வேம்பார் மற்றும் எட்டயபுரம் பகுதிகளைச் சேர்ந்த கபடி குழுவினருக்கு கபடி விளையாட்டு தள மேட்களை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி வழங்கினார். மேலும், மகளிருக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.

