மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வங்கி துறையை தனியார் துறைக்கு தாரைவார்க்கும் முயறச்சியை  ஒருபோதும் அனுமதிக்க முடியாது:கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > இந்தியா > வங்கி துறையை தனியார் துறைக்கு தாரைவார்க்கும் முயறச்சியை  ஒருபோதும் அனுமதிக்க முடியாது:கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ 
இந்தியா

வங்கி துறையை தனியார் துறைக்கு தாரைவார்க்கும் முயறச்சியை  ஒருபோதும் அனுமதிக்க முடியாது:கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ 

Social Vision
Last updated: 2025/11/05 at 8:34 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

வங்கி துறையை, தனியார் துறைக்கு, தாரைவார்க்கும் முயறச்சியை  ஒருபோதும் அனுமதிக்க முடியாது:கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ 

வங்கிகளை தேசியமயமாக்கியது எதிர்பார்த்த பலன்களை கொடுக்கவில்லை, வங்கிகளின் தனியார் மயம் தேச நலனை பாதிக்காது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. அன்னை இந்திரா காந்தி அவர்கள் 14 வங்கிகளை 1969 இல் தேசியமயமாக்குவதற்கு எடுத்த முயற்சிகளை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அன்று மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமய நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தில் 26-வது திருத்தம் கொண்டு வந்து அத்தகைய முற்போக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக ரூபாய் 50 கோடி டெபாசிட் தொகை பெற்றிருந்த 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது இருந்த வங்கிகளின் எண்ணிக்கை 8027. ஆனால், அந்த வங்கிகளின் எண்ணிக்கை 2023 இல் 1 லட்சத்து 51 ஆயிரத்து 192 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல, 11 லட்சத்து 75 ஆயிரத்து 149 பேர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றுகிறார்கள். இந்தியாவில் உள்ள மொத்த வங்கிகளில் 84 சதவிகிதம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. வங்கிகளின் எண்ணிக்கை 1969 இல் இருந்ததை விட 800 சதவிகிதம் கூடியதால் இந்தியாவின் அனைத்து கிராமங்களும் வங்கி சேவைகளின் காரணமாக இணைக்கப்பட்டுள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தற்போது 52 லட்சத்து 60 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. வங்கிகளில் உள்ள மொத்த டெபாசிட் தொகை ரூபாய் 67 லட்சத்து 50 ஆயிரத்து 400 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதன்மூலமாக விவசாயிகள், சிறுகுறு தொழில்கள், தொழில் முனைவோர், வணிக நிறுவனங்கள் பயன் பெற்று இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறார்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மொத்தம் 11.6 கோடி வங்கி கணக்குகளும், 9.40 கோடி கடன் அட்டைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.இந்திய மக்களின் குறிப்பாக கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளே தவிர, தனியார் வங்கிகள் அல்ல. நகர்ப்புறத்தில் இருப்பவர்களுக்கு தான் தனியார் வங்கிகள் சேவை செய்கிறதே தவிர, கிராமப்புற மக்களிடம் அவர்களது சேவை சென்றடையவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிற ஊதியம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தான் பெறப்பட்டு வருகிறது. இந்திய மக்களின் வாழ்வாதாரத்தோடு சம்மந்தப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் முக்கியத்துவத்தை நிதியமைச்சரே குறைத்து பேசுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. அன்னை இந்திராகாந்தி எந்த நோக்கத்திற்காக வங்கிகளை தேசியமயமாக்கினாரோ அந்த நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த யதார்த்த உண்மையை மூடி மறைத்து வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை என்று கூறுவது வங்கி துறையை தனியார் துறைக்கு தாரை வார்ப்பதற்கான திட்டமிட்ட முயற்சியாகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இதையும் படிங்க

ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  கடிதம்
2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றுகிற லட்சக்கணக்கான பணியாளர்கள் வங்கிகளை தனியார்மயமாக்குவதை கடுமையாக எதிர்த்து போராடி வருகிறார்கள். அன்னை இந்திரா காந்தியின் புகழை கெடுக்கின்ற நோக்கத்தில் நிர்மலா சீதாராமன் ஈடுபடுவதை நாட்டு மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். என செய்தி குறிப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

TAGGED: வங்கி துறையை தனியார் துறைக்கு தாரைவார்க்கும் முயறச்சியை  ஒருபோதும் அனுமதிக்க முடியாது:கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ
Social Vision November 5, 2025 November 5, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

மேட்டூர் அணையில் முதற்கட்டமாக, 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை

July 28, 2024
தமிழ்நாடு

புதுடெல்லியில் நடைபெற உள்ள ஏஐசிசிடியு அகில இந்திய பொது மாநாட்டில் , தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க முடிவு 

February 11, 2025
மாவட்டங்கள்

நூறுநாள் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

April 1, 2025
அரசியல்

தருமபுரி மாவட்டம் முன்னேற ,சாதிய கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

March 2, 2024
TTVDhinakaran
அரசியல்

காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்டும் பணிகளில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது – டி. டி. வி தினகரன்

February 16, 2024
அரசு நல திட்டம்தொழில்

நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம்  விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் 

June 28, 2024

மேலும் படிங்க

இந்தியா

ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

November 14, 2025
இந்தியா

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  கடிதம்

November 10, 2025
இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
இந்தியா

நாளை இந்திய நீரோட்டத்தோடு உலகம்: கவிஞர் வைரமுத்து

November 4, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?