மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கோவை கல்லூரி மாணவி-கூட்டு வல்லுறவு கொடூரம்: பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > கோவை கல்லூரி மாணவி-கூட்டு வல்லுறவு கொடூரம்: பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
அரசியல்

கோவை கல்லூரி மாணவி-கூட்டு வல்லுறவு கொடூரம்: பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

Social Vision
Last updated: 2025/11/05 at 9:54 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

கோவை கல்லூரி மாணவி-கூட்டு வல்லுறவு கொடூரம்: பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் இரவில் காரில் அமர்ந்தபடி தனது நண்பனுடன் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த மூன்று பேர் அந்த நபரைத் தாக்கிக் கொடுங்காயத்தைச் செய்துவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அந்தக் கொடிய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து விசாரித்தப் போலீசார் அவர்கள் தப்பித்துஓட முயற்சித்த போது, அவர்களைக் காலில் சுட்டுக் கைது செய்துள்ளனர். அந்த மாணவி இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

குற்றவாளிகளை விரைந்து போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர் என்றாலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

2025 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி 2024 ஆம் ஆண்டில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 3,407 லிருந்து 5,319 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை, பாலியல் வன்கொடுமை முயற்சிகள் உட்பட, 406 லிருந்து 471 ஆக அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 46 ஆக இருந்த பாலியல் துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 96 ஆக உயர்ந்துள்ளது. இது பெண்களின் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது.எனவே, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசு கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இதையும் படிங்க

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 
பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

இந்தக் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். இங்கு மட்டுமல்ல பெரும்பாலான குற்ற சம்பவங்கள் குடிபோதையில் இருப்பவர்களாலேயே நிகழ்கின்றன. அதுமட்டுமின்றித் தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளில் குடிபோதை காரணமாகவே பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. அவற்றில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழக்கின்றனர்.

இந்தியாவில் ஒப்ப்பீட்டளவில் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது என்பது உண்மைதானென்றாலும் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் அதற்குக் காரணமாக மது பழக்கம் இருப்பதும் கவனத்திற்குரியது. இந்தியாவில் அதிக அளவில் மது அருந்தப்படுவதில் இரண்டாவது மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. 15க்கும் மேற்பட்ட வயதுடையோர் மக்கள் தொகையில் 12% குடிநோயாளிகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பிறகு பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறைந்து இருப்பதாக அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீகார் மாநிலத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்நாட்டிலும் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்தன. அப்போது இருந்ததை விட இன்று குடி நோயாளிகளால் ஏற்படும் பாதிப்பு தீவிரமடைந்திருக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தனது அறிக்கையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தெரிவித்துள்ளார்.

Social Vision November 5, 2025 November 5, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

மலபார்கோல்டு, டைமண்ட்ஸ் தருமபுரியில் தனது பிரம்மாண்டமான புதிய ஷோரூம் திறப்பு

October 4, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

மருத்துவமனை ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்க்கு விண்ணப்பிக்கலாம் 

October 25, 2025
பிஜேபியை கண்டித்து ஆர்பாட்டம்
தமிழ்நாடு

பிஜேபி அரசை கண்டித்து டில்லியில் தமிழக எம்.பி க்கள் போராட்டம் !

February 8, 2024
கொலை குற்றம்
குற்றம்

கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில், ரியல் எஸ்டேட் அதிபர் கைது.

February 7, 2024
தமிழ்நாடு

வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா  அதியமான் கோட்டையில் அவரது சிலைக்கு மாலைஅணிப்பு 

April 23, 2024
வேலைவாய்ப்பு

விமானத்துறையில்  வேலை வாய்ப்பு 304 பணியிடங்கள் டிகிரி, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

June 1, 2024

மேலும் படிங்க

அரசியல்

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 

February 5, 2026
அரசியல்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 

February 3, 2026
அரசியல்

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

December 23, 2025
அரசியல்

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

December 6, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?