கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மாணவர் சங்கத்தின்சார்பில்தருமபுரிபிஎஸ்என்எல் அலுவலகம்அருகில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
கோவை விமான நிலையம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் கல்லூரி மாணவி ஒருவர் 3 இளைஞர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகள் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வர்களுக்கு உடனடியாக அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட தலைவர் ஏ. ஜெயா தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பி. கோவிந்தசாமி மாவட்ட தலைவர் மா. குறளரன், மாவட்ட துணை செயலாளர் ரவி, நிர்வாகிகள் அலெக்சாண்டார் ,அருள்குமார்,காரத்திகேயன்,தனுஷ்,மாணவர் சங்க மாவட்ட தலைவர் அஜித் குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆர். மல்லிகா,முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ். கிரைஸாமேரி,நகர செயலாளர் எஸ். நிர்மலா ராணி, ஒன்றிய செயலாளர் தமிழ்மணி, ஆகியோர் பேசினர்.

