சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு பணியாளர் ஒன்றியம் வலியுறுத்தல்.
தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றியத்தின் தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் சி. முனி ரத்தினம் தலைமை வகித்தார். மாவட்ட பிரச்சார செயலாளர் பி. மாது வரவேற்றார். மாவட்ட செயலாளர் வி. ஜெயந்தி அஞ்சலிதீர்மானத்தை வாசித்தார். மாநில தலைவர் பொ. ஜெயக்குமார், மாநில பொதுச்செயலாளர் கே. அன்னாதுரை, மாநில துணை செயலாளர் வி. கேசவ ராம்குமார், ஆகியோர்சிறப்புறையாற்றினர். அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலதுணைத்தலைவர் டி. கே. சிவக்குமார், மாநில செயலாளர் ஆர். வைர வேல், சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் வி. சுமதி, மாநில இணை செயலாளர் எஸ். லில்லி ஹில்டா ஜெனாப் , மாநில மகளிர் அணி செயலாளர் கே. ரேவதி,நிர்வாகிகள் வி. உஷா, கே. கார்த்திகாம்பிகா, டி. தருனா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.மாவட்ட துணைத்தலைவர்கள் டி. சாந்தி, பா. விமலா, மாவட்ட இணை செயலாளர்கள் சி. செந்தாமரை ஜே. சாவித்திரி மாவட்ட மகளிர் அணி தலைவர் வி. சந்திரா ஆகியோர் தீர்மானங்களை முன் மொழிந்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் சத்துணவு மையத்தில் கூடுதல் பொறுப்பு வகிக்கின்ற சத்துணவு அமைப்பாளர்களை விசாரணை குறிப்பாணை வழங்கப்படாமல் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும் புரட்சித் தலைவர் எம்.ஜீ.ஆர் சத்துணவுத் திட்டத்தில் பணிபுரிகின்ற சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஒன்றுக்கு மேற்ப்பட்ட சத்துணவு மையங்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்குபடுவதை கைவிட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜீ.ஆர் சத்துணவுத் திட்டத்தில் மதிய உணவிற்கான 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உணவு மான்யம் ஏழு மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, இன்றைய விலைவாசியில் கடன் வாங்கி உணவு வழங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு உணவு மான்யத்தை உடனடியாக வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜீ.ஆர் சத்துணவுத் திட்டத்தில் காலிப்பணியிடங்கள் அதிகம் உள்ள காரணத்தினால் சத்துணவு அமைப்பாளர்களே சமைக்க வேண்டிய நிலை உள்ளது. அதுமட்டுமில்லாமல் அருகாமையில் உள்ள மையங்களுக்கும் சமைத்து எடுத்துவழங்கவேண்டிய நிலை உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு சமையலர் உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.

.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் 42 ஆண்டு காலமாக தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரிகின்ற சத்துணவு பணியாளர்களை தேர்தல் கால வாக்குறுதியில் அறிவித்ததுபோல வாக்குறுதி எண் 313ன் படி காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும்
சத்துணவுத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற ஓய்வூதியம் ரூ. 2000 என்பது மருத்துவ செலவிற்கு கூட போதுமானதாக இல்லை. சத்துணவு பணியாளர்களின் இந்த நிலையை கருத்தில்கொண்டு குடும்ப ஓய்வூதியமாக குறைந்தபட்சம் ரூ. 7850 வழங்க வேண்டும் சத்துணவு திட்டத்தில் உள்ள 60 ஆயிரம் காலி பணியிடங்களை போர்க் கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.
சத்துணவு திட்டத்தில் 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவோம் என்று அரசு அறிவித்த அறிவிப்பு கிணற்றில் போட்டகல் போன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே சத்துணவு பணியாளர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு உடனடியாக பணியமர்த்த வேண்டும்
ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்சத்துணவுத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறும் சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற ஒட்டுமொத்த தொகையினை அமைப்பாளர்களுக்கு 5 லட்சமாகவும் சமையல் உதவியாளர்களுக்கு 3 லட்சமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்
சமையலர் நிலையில் இருந்து 5 ஆண்டுகள் பணிமுடித்த பணியாளர்களுக்கு சத்துணவு அமைப்பாளர் பதவி உயர்வு வழங்குவதை போல சமையல் உதவியாளர்களுக்கும் 10 ஆண்டுகள் என்பதை தளர்த்தி 5 ஆண்டுகளில் சத்துணவு அமைப்பாளர் பதவி உயர்வு வழங்கவேண்டும். 10 ஆண்டுகள் பணிமுடித்த ஆண் சத்துணவு பணியாளர்களுக்கு பதிவறை எழுத்தர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 42 ஆண்டு காலமாக சத்துணவுத் திட்டத்தில் பணிபுரிகின்ற சத்துணவு பணியாளர்களிடம் வழங்க வேண்டுமாய கேட்டும்.25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்களில் 3 பணியிடமும் இல்லாத நிலையில் சத்துணவு வழங்குவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே இந்த மையங்களில் ஒரு சத்துணவு உதவியாளர் பணியிடமாவது பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

