சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு (S.I.R.) எதிராகஅனைத்துக் கட்சி கூட்டம்.
சென்னையில், கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு (S.I.R.) எதிராக போராடிட அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகப் பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

