நல்லம்பள்ளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் திறப்பு விழா
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் நல்லம்பள்ளி சேலம் மெயின்ரோடு அருகில் புதியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது.
அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் எஸ். எஸ். சின்ன ராஜ் தலைமை வகித்தார்.புதிய அலுவலகத்தை மூத்த தலைவர் பி. இளம் பரிதி திறந்து வைத்தார்.

மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார் மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ. அருச்சுனன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். கிரைஸாமேரி, கே. என். மல்லையன், கே. எல்லப்பன் , மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி. காளி, கே. முனியப்பன், டி. அந்தோனிராஜ்,பி.இராமன் , இந்திராணி, கே. தனப்பால் , எஸ். மாலா ஆகியோர் பங்கேற்று பேசினர். ஒன்றிய குழு உறுப்பினர் சி. காவேரி நன்றி கூறினார்.

